பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரசு தொடக்க பள்ளி

திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், சமத்துவப் பொங்கல் விழா, நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியை சாந்தி, இடைநிலை ஆசிரியர், கோகுல்ராஜ் மற்றும் மாணவ - மாணவியர், புது மண்பானையில் பொங்கல் வைத்து, சூர்யபகவானுக்கு படையலிட்டனர்.

அரசு மருத்துவமனை

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமைமருத்துவமனையில், நேற்று காலை நடந்த,சமத்துவப் பொங்கல் கொண்டாட்டத்திற்கு, மருத்துவத் துறை இணை இயக்குனர்,மருத்துவர், தயாளன் தலைமை வகித்தார்.ஆண் மருத்துவர்கள் வேட்டி, சட்டையிலும், பெண் மருத்துவர்கள், பட்டுச் சேலை அணிந்தும், பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடினர்.பின், பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, பொங்கல் வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலகம்

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில், சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடந்தது. ஆணையர், முருகேசன் தலைமை வகித்தார்.இதில், நகராட்சி அலுவலர்கள், துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்டோர், பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து, கொண்டாடினர். பின், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வினியோகிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X