கொடி காத்த குமரனுக்கு அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடி காத்த குமரனுக்கு அஞ்சலி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : திருப்பூர் குமரன் நினைவு நாள் முன்னிட்டு அமைப்பினர், பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த சுதந்திர போராட்டங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதில் சட்டமறுப்பு இயக்கத்தின் போது, திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குமரன், போலீசார் அடக்குமுறையில் தடியடியில் காயமடைந்தார். இதில் உயிர் போகும் நிலையிலும் அவர் தன் கையில் ஏந்தியிருந்த கொடியை விட மறுத்து அதை பாதுகாப்புடன் வைத்திருந்தார்.அவரது நினைவு நாளான நேற்று திருப்பூரில் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், அதன் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், குமரன் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் குமரன் ரோடு, தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள அவரது நினைவு ஸ்துாபிக்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.பா.ம.க., சார்பில் அதன் மாநில துணை தலைவர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள், குமரன் நினைவிடம் மற்றும் நினைவு ஸ்துாபியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட தியாகிகள் சமிதி சார்பில், நிர்வாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் பங்கேற்று மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அதே போல், குமரன் நினைவிடம் மற்றும் நினைவு ஸ்துாபியில் பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X