நொய்யல் கரையோரம் நிரந்தர வழித்தடம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் கரையோரம் நிரந்தர வழித்தடம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், நொய்யல் கரையோரமாக, வழித்தடம் ஏற்படுத்த அனுமதிக்கவேண்டுமென, முறை யிட்டனர்.திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியபுத்துார். அங்கிருந்து, நொய்யலை கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் முன், விவசாயிகளும், பொதுமக்களும், நொய்யல் தென்கரையோரமாக, வழித்தடம் அமைத்து பயன்படுத்தி வந்தனர்.அருகில் உள்ள விவசாயிகளும், முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, சிலர் ஆக்கிரமித்துள்ளதால், வழித்தடம் மறைந்துவிட்டதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள் நொய்யலை கடக்க சிரமம் ஏற்படுவதாக கூறி, தென்கரையில் வழித்தடம் அமைக்க முயற்சி எடுத்தனர்.ஒரு சிலர் பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி வருவதாக, அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், நேற்று, இப்பிரச்னை குறித்து, கலெக்டரிடம் முறையிட்டனர்.அதில், 'ஆய்வு நடத்தி, வழித்தடத்தை மீட்டுத்தர வேண்டும். நொய்யல் கரையில் ஆக்கிரமிப்புஏற்படுவதை தடுக்கும் வகையில், திருப்பூரில் இருப்பது போல், நொய்யல் தென்கரையில், புதிய வழித்தடம் அமைக்கஅனுமதி வழங்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பழனிசாமி,''தாசில்தார் மூலம் ஆய்வு நடத்தி, நொய்யல் கரையோர ஆக்கிரமிப்புகளை எடுத்து, வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X