மருத்துவ காப்பீடு அட்டை வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு அட்டை வினியோகம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர் : தெளிவான முகவரி குறிப்பிடாத மத்திய அரசின் காப்பீடு அட்டைகளை, மாநகராட்சி மண்டல அலுவலர்கள் உதவியுடன் பிரிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஜீவன் ஆயுள் யோஜனா' காப்பீடு அட்டைகள் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப் பட்டு வருகின்றன. திருப்பூர் தபால் கோட்டத்தில் உள்ள திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் அலுவலகம், எட்டு துணை தபால் நிலையம், 276 கிளை நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க, மூன்று லட்சம் காப்பீடு அட்டைகள் அனுப்பப்பட்டன. இந்த அட்டைகளில் வாடிக்கையாளரின் முகவரி முழுயாக குறிப்பிடப்படாமல், ஒவ்வொரு மண்டலத்தின் பெயர், அங்குள்ள முக்கிய வீதிகளின் விபரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.இதனால், குழப்பம் அடைந்த தபால் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான மக்களுக்கு எப்படி தபால்களை கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி எழுந்தது.இது தொடர்பாக கோட்ட கண்காணிப்பாளரிடம், தெரிவித்தனர். மாநகராட்சி மண்டல அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உதவியுடன் காப்பீடு அட்டைகளுக்கான முகவரியை கண்டறிய ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மண்டலம், வார்டு வாரியாக பரிட்சையமான பகுதிகளை அடிப்படையாக கொண்டு காப்பீடு அட்டைகள் பிரிக்கும் பணி மூன்று நாட்களாக நடந்தது.தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாத் கூறுகையில், ''50 சதவீத காப்பீடு அட்டை முகவரி காணப்பட்டு விட்டது. இவற்றை அந்தந்த தபால் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.மீதமிருக்கும் அட்டை பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்துக்குள் அவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்போம். தெளிவான முகவரி இல்லாததால், பணி தாமதமாகியது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X