டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2019; 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' அணி அபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2019; 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' அணி அபாரம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர் : திருப்பூரில் நடந்து வரும் டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 154 ரன்கள் வித்தியாசத்தில், கேரளா ஆதிரேயா கிரிக்கெட் அகாடமி அணியை தோற்கடித்தது.திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, டி.எஸ்.சி., சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி, முருகம்பாளையத்தில் உள்ள வயர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில், ஒன்பது நாட்கள் நடக்கிறது. கடந்த, 10 ம் தேதி போட்டிகள் துவங்கியது. 'ஏ' மற்றும் 'பி' பிரிவில் தலா நான்கு அணிகள் வீதம் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை எலைட் கிரிக்கெட் அகாடமி - கேரளா ஆதிரேயா கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. டாஸ் வென்ற எலைட் கிரிக்கெட் அகாடமி அணி, முப்பது ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 168 ரன் எடுத்தது. இந்த அணியின் ஷாபின்ஸ் கோர்ட், 60 பந்துகளில், ஒரு சிக்ஸர் உட்பட, 68 ரன் எடுத்தார்.துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி, வெற்றி இலக்குக்கு பயணித்த கேரளா அணி, 30 ஓவரில், ஐந்து விக்கெட்டுக்களை இழந்து, 163 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், கடைசி ஆறு ரன்களை எடுக்க முடியாமல், தோல்வியை தழுவியது. ஷாபின் ஸ்கோர்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.நேற்று காலை மூன்றாவது லீக் போட்டி திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் - கேரளா ஆதிரேயா கிரிக்கெட் அகாடமி அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 30 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு அதிரடியாக, 227 ரன் குவித்தது. இந்த அணியின் பேட்ஸ்மேன் பூபதி, 86 பந்துகளில், சதம் (108 ரன்) கடந்து அசத்தினார்.கடின இலக்கை விரட்டிய கேரளா ஆதிரேயா கிரிக்கெட் அகாடமி அணி, 27 ஓவர் தாக்குப்பிடித்தது. ஆனால், பத்து விக்கெட்டுகளை இழந்து, 73 ரன் மட்டுமே எடுத்தது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியின் பவுலர் ஹரிசங்கர், ஐயப்பன் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். 154 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X