'இங்கிலீஷ் செம ஈஸி; மாணவருக்கு சொல்லுங்க!' பயிற்சியில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இங்கிலீஷ் செம ஈஸி; மாணவருக்கு சொல்லுங்க!' பயிற்சியில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர் : ''ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரிடத்தில் வளர்க்க வேண்டும்,'' என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் பாடவாரியாக ஒவ்வொரு மாணவரின் தனித்திறனை வளர்க்க, அப்பாடம் தொடர்புடைய ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி, கற்றல் திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தாளர்கள் மூலம் அளிக்கப்படுகிறது.ஒன்பதாம் வகுப்பு தமிழ், சமூகஅறிவியல், அறிவியல் ஆசிரியர்களுக்கு வெவ்வேறு பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி, திருப்பூர், பல்லடம் ரோடு, காந்தி வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி தலைமை வகித்தார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 153 ஆங்கில ஆசிரியர்கள் பங்கேற்றனர். சென்னையில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வின்சென்ட் ரவீந்திரன் (நஞ்சப்பா பள்ளி), ராஜாரவி (கே.எஸ்.சி., பள்ளி), சுமதி (சோகம்பாளையம் பள்ளி, பல்லடம்) ஆகியோர் பயிற்சியளித்தனர்.'ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, 100 மதிப்பெண் கொண்ட ஆங்கிலம் அறிவை வளர்க்கும் வகையிலான வினாத்தாள் தயாரித்து, மாதிரித்தேர்வு நடத்த வேண்டும். அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவரை தெரிவு செய்து, ஆங்கில சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.ஒவ்வொரு மாணவரையும், ஆங்கிலத்தில் புலமை பெறச்செய்வதுடன், ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் வளர்க்க வேண்டும்,' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X