பொங்கலுக்கு பின் ஒலிக்கும் 'ட்ரிங் ட்ரிங்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொங்கலுக்கு பின் ஒலிக்கும் 'ட்ரிங் ட்ரிங்'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெங்களூரு:ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த, கப்பன் பூங்காவில் 'வாடகை சைக்கிள் திட்டம்' செயல்படுத்தப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது;

பொங்கல் பண்டிகைக்கு பின், பொது மக்களுக்கு வாடகை சைக்கிள் கிடைக்கும்.சில மாதங்களுக்கு முன், மைசூரில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும், 'ட்ரிங் ட்ரிங்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் சுற்றுலாவாசிகளிடையே, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மைசூரின் சுற்றுலா இடங்களை, பலரும் சைக்கிளில் கண்டு ரசிக்கின்றனர்.

இதே போன்று, பெங்களூரில் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், மாசு அளவை குறைக்கும் நோக்கிலும், கப்பன் பூங்காவில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சுற்றுலாத்துறை வகுத்துள்ளது.திட்டத்தை செயல்படுத்த முன் வந்தும், தவிர்க்க முடியாத காரணத்தால் ஓராண்டாக செயல்படுத்த முடியவில்லை.

பொங்கல் பண்டிகைக்கு பின், வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த, சுற்றுலாத்துறை தயாராகி வருகிறது. இதற்காக ஹட்சன் சதுக்கத்தில் ஷெல்டர் போன்ற வடிவில், சிறப்பு சைக்கிள் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிறுத்தத்தில் டிஸ்கவரி நிறுவனத்தினர், 20 முதல் 25 சைக்கிள்களை நிறுத்துவர். இங்கு மணிக்கணக்கில் சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கும்.மெட்ரோ ரயில், பஸ்களில், கப்பன் பூங்கா அருகில் வந்திறங்கும் பலர், ஓலா கேப் அல்லது ஆட்டோக்கள் மூலம், செல்ல வேண்டிய இடத்துக்கு செல்கின்றனர்.

இனி வாடகை சைக்கிள்களிலும் பயணிக்கலாம்.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஹாந்தேஷ் முருகோட் அளித்த பேட்டி:சுற்றுலாத்துறை, கப்பன் பூங்காவின் நான்கு பகுதிகளில், வாடகை சைக்கிள் நிறுத்தம் கட்ட இடம் கேட்டிருந்தது. முதற்கட்டமாக ஹட்சன் சதுக்கத்தில் இடம் அளிக்கப்பட்டது. இங்கு வாடகை சைக்கிள் திட்டம் வெற்றியடைந்தால், மற்ற இடங்களில் சைக்கிள் நிறுத்தம் கட்ட இடம் அடையாளம் காணப்படும்.
பெங்களூரின் எந்த பகுதியிலிருந்து வந்து கப்பன் பூங்கா அருகில் இறங்குபவர்களுக்கு, சைக்கிள் மிதிக்க தெரிந்தால் போதும், வாடகை சைக்கிள் பயன்படுத்தலாம்.ஹட்சன் சதுக்கத்திலிருந்து, எம்.ஜி., ரோடு, பிரிகேட் ரோடு, ஹலசூரு, ரிச்மெண்ட் சதுக்கம், மல்லேஸ்வரம் என, பல்வேறு இடங்களுக்கு வாடகை சைக்கிளில் செல்லலாம். தங்கள் பணியை முடித்து, சைக்கிளை ஒப்படைக்கலாம்.

பொங்கலுக்கு பின் வாடகை சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூன்று மணி நேரத்துக்கு சைக்கிள் பயன்படுத்த, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. கட்டணம் குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X