மரபுகளின் ரட்சகர் காஞ்சி மகாபெரியவர் :சுகிசிவம் புகழாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரபுகளின் ரட்சகர் காஞ்சி மகாபெரியவர் :சுகிசிவம் புகழாரம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:''தனது முன் குருவான ஆதிசங்கரர் வழியை பின்பற்றுவதே தன் வழி; என் விருப்பங்களை மடத்தில் நுழைக்க அதிகாரமில்லை எனக்கூறிய காஞ்சி மகாபெரியவர், மரபுகளின் ரட்சகராக இருந்தவர்'' என சொற்பொழிவாளர் சுகசிவம் பேசினார்.
மதுரையில் காஞ்சி மகாபெரியவர் 25வது ஆராதனை சொற்பொழியில் குருவும், திருவும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: துறவியர்களில் இருவகை உண்டு. வீட்டைவிட்டு வெளியேறி துறவறம் மேற்கொள்பவர் ஒருவகை. இவர்கள் எந்த மரபையும் பின்பற்றுவதில்லை. மற்றொரு வகை மரபுவழியாக வருவது. காஞ்சி மடத்தை மரபு மாறாமல் பாதுகாத்த மகா பெரியவர், தனது மனத்திற்கு விரும்பிய செயலை செய்ய முடியாது. காரணம் மரபு தடுக்கும்.
ஒரு பத்திரிகையாளர் அவரிடம் 'ஏன்தான் இந்த பீடத்தின் பொறுப்புக்கு வந்தோம்' என நினைத்தது உண்டா' என கேட்டார். அதற்கு மகாபெரியவர், 'நான் சிலரை நமஸ்காரம் செய்ய வேண்டும் என நினைப்பேன். ஆனால் பீடத்தின் மரபு கருதி அது முடியாது. அந்த சமயத்தில் நினைத்துக்கொள்வேன்' என்றார்.ஒருசமயம் அவரிடம் ஒருவர், 'மடத்தை நவீனமாக்கலாமே' என கேட்டார். அதற்கு அவர் 'இந்த மடத்தை நானா நிறுவினேன்? பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்ட இம்மடத்தை வடிவம் மாறாமல் அப்படியே அடுத்து வருவரிடம் கொடுப்பதுதான் எனது கடமை. சங்கலி கம்பி ஒரே வடிவமாக இருப்பதால்தான் சங்கலி என்று பெயர். அதுபோல் எனது முன் குருவான ஆதிசங்கரர் வழியை பின்பற்றுவதுதான் என் வழி; என் விருப்பங்களை மடத்தில் நுழைக்க அதிகாரமில்லை' என்றார். அவர் மரபுகளின் ரட்சகராக இருந்தவர். இவ்வாறு பேசினார்.
முன்னதாக அனுஷத்தின் அனுகிரஹம், பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோருக்கு இலவச அரிசியும், நன்கொடையாளர்களுக்கு சேவா ரத்னா விருதும் வழங்கப்பட்டது. நிறுவனர் நெல்லை பாலு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X