பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:மதுரையில் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தன.மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில் விழா நடந்தது. பதிவாளர் சின்னையா, சிண்டிகேட் உறுப்பினர் ராமகிருஷ்ணன், அனைத்து துறை மற்றும் புலங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
* வடபழஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பிச்சைமணி தலைமையில் நடந்தது. போகி பண்டிகையை மாசில்லாமல் கொண்டாட மாணவர்கள் உறுதியேற்றனர். ஆசிரியர்கள் செல்வி, ஸ்டெல்லா மனோரஞ்சிதம், உமாமகேஸ்வரி பங்கேற்றனர்.* மதுரை மங்கையற்கரசி கலை, அறிவியல் கல்லுாரியில் மாணவிகள் சார்பில் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் அசோக்குமார், இயக்குனர் சக்தி பிரனேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.*கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் திருஞானம் துவக்க பள்ளியில் தலைவர் சுரேந்திரன் பாபு தலைமையில் விழா நடந்தது. செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஆசிரியை தங்கலீலா வரவேற்றார். தலைமையாசிரியர் சரவணன் பொங்கல் விழா குறித்து விளக்கினார். ஆசிரியர்கள் கீதா, பாக்யலட்சுமி, சரண்யா, ஓம்சத்தி, உஷாதேவி பங்கேற்றனர்.* நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் முத்தமிழ் வாரவிழா நடந்தது. தாளாளர் செந்தில் ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் சபுரால் பானு, உதவி தலைமையாசிரியை பொற்கொடி முன்னிலை வகித்தனர். ஆசிரியை கல்யாணி தொகுத்து வழங்கினார்.* மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியில் மாணவிகள், பேராசிரியைகள் வண்ணக்கோலமிட்டு கொண்டாடினர். மாணவிகள் கலாசார உடையணிந்து உறியடி, நடனம், மெதுநடை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். தலைவர் போத்தி கோபாலகிருஷ்ணன், செயலாளர் இந்திராணி, முதல்வர் பூவழகி, நிர்வாகிகள் போத்திராஜ், அருண், இயக்குனர் புஷ்பகலா பங்கேற்றனர்.* ஒத்தக்கடை தொடக்க பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புகையில்லா போகி என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவர்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மாலா, மெர்சி ஹேமமாலினி, மோசஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X