உடன்குடி அனல் மின் நிலையம் திட்டமிட்டபடி துவக்கப்படுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடன்குடி அனல் மின் நிலையம் திட்டமிட்டபடி துவக்கப்படுமா

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:துாத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும், உடன்குடி அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள், மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய, அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைத்து வருகிறது. அதில், பயன்படுத்தும் நிலக்கரியை கொட்டி வைப்பதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், கடலில், நிலக்கரி முனையம் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மின் வாரியம் மேற்கொள்கிறது. உடன்குடி மின் நிலையத்தில், 2020 - 21ல், மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, கட்டுமான பணிகள், மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மின் வாரியத்தின், மின் திட்டங்கள் பிரிவு உயரதிகாரிகள், உடன்குடி மின் நிலைய பணிகளை, நேற்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உடன்குடி மின் திட்டத்தின் மொத்த திட்ட செலவு, 13 ஆயிரத்து, 76 கோடி ரூபாய். இதற்கு, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனம், நிதி உதவி செய்துள்ளது. திட்டமிட்டபடி பணிகளை முடிக்கவில்லை எனில், திட்ட செலவு அதிகரிப்பதுடன், தனியார் நிறுவனங்களிடம், மின்சாரம் வாங்க வேண்டி நிலை வரும்.

இந்நிலை ஏற்படாமல் இருக்க, உடன்குடி மின் நிலையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும், உப்பூர் மின் திட்ட பணிகள், தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, முடுக்கி விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201915:25:17 IST Report Abuse
Bhaskaran இழுத்து கடத்தினால் திட்டமதிப்பீடு இருபதிலிருந்து முப்பது விழுக்காடு அதிகரிக்கும் மொத்தத்தில் மக்களின் தலையில் வந்து விடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X