பிளாஸ்டிக் ஒழிக்க கண்காணிப்பு குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் ஒழிக்க கண்காணிப்பு குழு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை : கோவை மாவட்டத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த, உள்ளாட்சி அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.கோவையில், 'தினமலர்' நாளிதழ், மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பிளாஸ்டிக் மாசில்லா கோவை மாவட்டத்தை உருவாக்க, தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்றுவதற்காக கண்காணிப்பு குழு நியமித்து, கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சிக்கு உதவி கமிஷனர்கள் கே.ரவிக்குமார், ஜெ.ரவிக்குமார், ரவி, குமார், செந்தில்குமார் ரத்தினம் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில், தலா ஒரு சுகாதார ஆய்வாளர், வருவாய்த்துறை அலுவலர், போலீஸ் அதிகாரி இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு உதவி கமிஷனரும், ஆறு குழுக்களுக்கு தலைமை வகிப்பர்.இதேபோல், அனைத்து பேரூராட்சிகளிலும், அந்தந்த செயல் அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகளில் தலா நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றியங்களில் அமைத்துள்ள கண்காணிப்பு குழுக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமை வகிப்பர்.இவர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதோடு, அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X