இன்முகம் காட்டும் அரசு பஸ் கண்டக்டர்! உதவி செய்து உள்ளம் மகிழ்வதே விருப்பம் என்கிறார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்முகம் காட்டும் அரசு பஸ் கண்டக்டர்! உதவி செய்து உள்ளம் மகிழ்வதே விருப்பம் என்கிறார்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இன்முகம் காட்டும் அரசு பஸ் கண்டக்டர்! உதவி செய்து உள்ளம் மகிழ்வதே விருப்பம் என்கிறார்

பேரூர் : அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர், தங்களை நாடும் பொதுமக்களை, கடிந்து பேசுவதையே பார்த்திருப்போம். அதுவும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்போர் படும்பாடு சொல்லிமாளாது.

சரியான சில்லரை கொடுக்கவில்லை என்றாலோ, மீதி சில்லரை கேட்டுக் கொண்டே இருந்தாலோ, சில கண்டக்டர்கள் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, அர்ச்சிப்பர். சில தருணங்களில் பாதியில் இறக்கி விடுவது சர்வசாதாரணம். அதுபோன்ற சமயங்களில், வாக்குவாதம் முற்றி, கைகலப்பு நிகழ்வதும் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில், அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டர் ஒருவர், பயணிகளை பார்த்து கைகூப்பி, 'அனைவருக்கும் வணக்கம். தாங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை தேர்வு செய்ததற்கும், தங்களுக்கு சேவை செய்வதற்கும் வாய்ப்பளித்தமைக்கும் நன்றி. பஸ்சை துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தங்களின் பயணம் இனிதாகவும், பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகிறேன். சரியான சில்லரை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என, இன்முகத்தோடு பேசி பணியை துவக்குகிறார்.

கனிவாக பேசும் முறையால், மெய்சிலிர்த்த சிலர், வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வைரலாக்கி விட்டனர். 'யூடியூப்', 'பேஸ்புக்', 'வாட்ஸ்ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'காணீர் காணீர்... அரசு பஸ் கண்டக்டரின் அற்புத பணிவை காணீர்' என்று, அவரது வீடியோ பரவி வருகிறது.இந்த நற்செயலுக்கு சொந்தக்காரர், கோவை பேரூர் அடுத்துள்ள ராமசெட்டிபாளையத்தை சேர்ந்த சிவசண்முகம். கோவை - மதுரை செல்லும் அரசு பஸ் கண்டக்டர். தனது இன்முகத்தின் பயணத்தை அவரே தொடர்கிறார்.

''மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. 1995ல் கண்டக்டர் பயிற்சி வகுப்பின்போது, 'பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என, ஒரு அதிகாரி கேட்டார்.'வயதானோர், கர்ப்பிணி, கை குழந்தைகளுடன் வருவோருக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கை வழங்குவேன்' என்றேன்.அனைவரின் முன், என்னை பாராட்டினார். இதுவே எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. 2015 வரை, நகர பேருந்துகளில் பணியாற்றினேன். மாணவர்களை எங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்து ஏற்றிச் செல்வோம். பஸ்களில் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளவும் அறிவுறுத்துவேன்.

''2016 முதல், கோவை - மதுரை வழித்தடத்தில் பணியாற்றுகிறேன். பயணிகளிடம் அன்புடனும், மென்மையாகவும் பேசுவதால், சில்லரை இல்லையென்றாலும், அருகில் இருப்போருடன் சேர்ந்து, 'டிக்கெட்' வாங்குகின்றனர். இருதரப்பும் மனநிறைவோடு பயணிக்க முடிகிறது. இதுவரை, 131 கண் சிகிச்சை முகாம்களையும் நடத்தியுள்ளேன்; பொது சேவையே மன அமைதியை கொடுக்கும்; உதவி செய்து உள்ளம் மகிழ்வதே விருப்பம்,'' எனக்கூறி, புன்னகையுடன் விடைபெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Narayanan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201906:38:40 IST Report Abuse
K Narayanan I have seen and interacted with many bus conductors and drivers as i frequently travel. Almost all of them seems to be well behaved, patience and friends. Hatsoff to their dedication.
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201917:51:19 IST Report Abuse
ருத்ரா சிலநேரங்களில் சில மனிதர்கள் மனதிற்கு நெருக்கமாக வித்யாசமாக டென்ஷன் இல்லாமல். பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201914:09:32 IST Report Abuse
அர்ஜுன் வாழ்த்துக்கள்.. மற்றவர்களுக்கு இவர் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு பாராட்டு இவரை இந்த அளவுக்கு மாறவைத்திருக்கிறது என்றால், அனைவரும் மற்றவர்கள் செய்யும் நற்செயல்களை பாராட்டினால் எப்படி இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X