தூசி பறக்கும் ரோட்டிற்கு விடிவு எப்போது:தண்ணீர் ஊற்றி சமாளிப்பது ஏன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூசி பறக்கும் ரோட்டிற்கு விடிவு எப்போது:தண்ணீர் ஊற்றி சமாளிப்பது ஏன்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர்பகுதி சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் வாகனங்கள் செல்லும் போது துாசி பறந்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால் அவ்வப்போது டேங்கர் லாரிகளில் தண்ணீர் ஊற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். நிரந்தர தீர்வு எப்போது, என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராமநாதபுரத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகர் புற மெயின் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. மதுரை ரோட்டில் ரோமன் சர்ச் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட், அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் பல இடங்களில் ரோடு சேதம் அடைந்துள்ளது.
சாலைகளில் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் ரோட்டில் தேங்குவதால் அதில் வாகனங்கள் செல்லும் போது சேதம் அடைகிறது. துாசியால் மாசு: பள்ளங்கள் ஏற்பட்ட பகுதியில் தற்காலிக நெடுஞ்சாலைத்துறையினர் ஜல்லி, ஜல்லி துாசியையும் கலந்து பள்ளங்களை நிரப்பினர். மழை நேரம் அடிக்கடி ரோடு சேதமாகிறது. இதில் பலமுறை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். மழை இல்லாத நிலையில் தற்போது சாலையில் துாசி பறந்து புழுதி மண்டலம் ஏற்படுகிறது.
பாதிப்பு: இதன் காரணமாக துாசியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து ஏற்பட்டு வருகிறது. மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் நிலை உள்ளது.
துாசியால் சுவாசம் பாதிக்கப்பட்டு பலருக்கு ஆஸ்த்துமா, கண் எரிச்சல், ஜலதோஷம் ஏற்பட்டு ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்கள், வயதான முதியவர்கள் இந்த ரோட்டில் நடமாட முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
தண்ணீர் தெளிப்பு: நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தினமும் லாரியில் டிரம்புகளில் தண்ணீர் நிரப்பி வந்து ரோடுகளில் துாசி பறக்கும் இடங்களில் தெளித்து தற்காலிக தீர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஈரமாக இருக்கும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே துாசி பறப்பதில்லை. காய்ந்து போனதும் மீண்டும் துாசி பறக்கிறது.
நிரந்தர தீர்வு: நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மட்டும் நிரப்பாமல் அப்பகுதியில் புதிய சாலைகள் அமைக்க வேண்டும், என ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அச்சுந்தன் வயல் முதல் பட்டணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை புதிய சாலை அமைக்க 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்பட்டாலும், பணிகளை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X