பரமக்குடியில் மணக்கும் மஞ்சள்பட்டினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் மணக்கும் மஞ்சள்பட்டினம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமநாதபுரம்:விசேஷ நிகழ்வுகள் நடக்கும் வீடுகளில் முதலில் பயன்படுத்துவது மஞ்சள் தான். பரமக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் முதல் வார்டாக மஞ்சள் விளையும் மஞ்சள்பட்டினம் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.
மகாலட்சுமியின் அம்சமாக போற்றப்படும் மஞ்சள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய பொருளாகும். இயற்கையை போற்றும் தை பொங்கல் அன்று சூரியனுக்கு படைக்கப்படும் பொங்கல் பானையில் மஞ்சள் குலை கொத்தாக உள்ள செடியை கட்டுவது வழக்கம். இம்மஞ்சளை பொங்கலுக்கு மறுநாள் பெரியவர்கள் நெற்றியில் வைத்து சிறியவர்களை ஆசிர்வதிப்பர்.
இம்மஞ்சள் செடிகள் நல்ல தண்ணீர் மற்றும் நல்ல சூழலில் மட்டுமே வளரும். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 1வது வார்டு மஞ்சள் விளையும் இடமாக உள்ளதால், மஞ்சள்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. வைகை ஆற்றின் கரையில் இயற்கையான சூழலில் ஆண்டிற்கு ஆறு மாதங்கள் இப்பகுதியில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு மட்டுமே மஞ்சள் செடிகளை பாதுகாத்து வளர்க்கின்றனர்.
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் மஞ்சளுக்கு சுத்தமான தண்ணீரை பாய்ச்சுகின்றனர். இயற்கை உரம் மட்டுமே சாத்தியம் என்பதால், செயற்கை உரங்களுக்கு இங்கு வேலை இல்லை. இங்கு விளைவிக்கப்படும் மஞ்சளை பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து விற்கின்றனர். மற்ற நாட்களில் ஆண்டு முழுவதும் பொன்னாங்கண்ணி, பசலை, அகத்தி, மிளகுதக்காளி, முருங்கை, சிறுகீரை என பாதுகாத்து வளர்க்கின்றனர்.
இத்துடன் கிழங்கு வகைகளும், கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் அதிகம். பரமக்குடியில் மணக்கும் மஞ்சள்பட்டினம் முதல் வார்டாக, முத்தாய்ப்பாய் அமைந்துள்ளதை எண்ணி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X