'ஆன்-லைன்' மாணவர் பதிவு; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்-லைன்' மாணவர் பதிவு; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அருப்புக்கோட்டை:அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவை அன்றாடம் 'ஆன்-லைன்' ல் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவால் ஆசிரியர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களை கொண்டு வரும் வகையில் புதிய கல்விமுறையை வழங்கி வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக கல்விதுறை வெப்சைட்டில் பார்க்கும் வகையில் செய்து வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக மாணவர்களின் தினசரி வருகை பதிவை அன்றாடம் 'ஆன்-லைன்' மூலம் அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. கிராம பள்ளிகளிலோ 'டவர்'சரிவர கிடைக்காமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டும் என்ற உத்தரவால் சிக்னல் கிடைக்கும் இடமாக பார்த்து செல்ல வேண்டியுள்ளது.
சிக்னலை தேடி அடுத்த ஊருக்கு சென்ற ஆசிரியர்களும் உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் தேவை இல்லாத 'டென்ஷன்' க்கு ஆளாகின்றனர்.கல்வித்துறையில் 'அப்டேட்' அவசியமதான். அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். இன்றைய ஆசிரியர்களுக்கு கற்பித்தலை தவிர கல்வித்துறை கேட்கும் விபரங்கள், பராமரிக்க வேண்டிய ஆவணங்களை தயார் செய்ய தான் நேரம் சரியாக உள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X