அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.,: ஜன.21 முதல் செயல்படுத்த உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.,: ஜன.21 முதல் செயல்படுத்த உத்தரவு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 39 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் ஜன. 21 முதல் துவங்குகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க புதிய திட்டமாக அங்கன்வாடி மையத்துடன் இணைந்த பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவக்க அரசு அனுமதி வழங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் 39 பள்ளிகளில் இவ் வகுப்புகள் துவக்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை ஆமணக்குநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை மேலரதவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மதுரை சாலை நகராட்சி நடுநிலைப்பளளி, நரிக்குடி சேதுராயனேந்தல், தச்சனேந்தல், மேலப்பருத்தியூர், மினாக்குளம், செல்லையாபுரம், கல்லங்குடி, உடையசேர்வைக்காரன்பட்டி, வீர ஆலங்குளம், எர்ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.
ஸ்ரீவில்லிபுத்துார் சாமிநாதபுரம், இனாம் கரிசல்குளம்,நாகபாளையம், சொக்கலாம்பட்டி, ஸ்ரீவி., ஊரணிப்பட்டி நகராட்சி பள்ளி, கிருஷ்ணன் கோயில்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி. ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லுார், ஆசிலாபுரம், விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, மருளூத்து ஊராட்சி ஒன்றிய பள்ளி.காரியாபட்டி அரசகுளம், சோலைக்கவுண்டன்பட்டி, மேலத்துலுக்கன்குளம், நம்பிராஜபுரம். சிவகாசி ஒன்றியம் ஊராம்பட்டி, அய்யனார்காலனி, வடபட்டி, வெள்ளையாபுரம், செங்கமலநாச்சியார்புரம், மத்தியசேனை, சித்தமநாயக்கன்பட்டி, குமிலங்குளம், ரங்கபாளையம் .வத்தாரயிருப்பு நெடுங்குளம், வெம்பக்கோட்டை ஒன்றியம், துரைச்சாமிபுரம், கோட்டைப்பட்டி, மஞ்சளோடைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்படுகிறது.இப் பள்ளிகள் ஜன., 21 முதல் செயல்பட உள்ளது. இப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை 18 முதல் துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X