''கடவுளின் பெயரால் உள்ள ராமநாதபுரம் தூய்மையில் முதலிடம் பெற வேண்டும்''| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

''கடவுளின் பெயரால் உள்ள ராமநாதபுரம் தூய்மையில் முதலிடம் பெற வேண்டும்''

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமநாதபுரம்:''கடவுளின் பெயரால் உள்ள ராமநாதபுரம் துாய்மை நகர் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும்,''என கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
ராமநாதபுரத்திற்கு மாலை 3:00 மணிக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரசு விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். பின் மாலை 5:45 மணிக்கு பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட துாய்மை இந்தியா இயக்க கண்காட்சியை திறந்து வைத்தார்.
அவரை கலெக்டர் வீரராகவராவ், ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., வரவேற்றனர். அமைச்சர் மணிகண்டன், கவர்னரின் கூடுதல் செயலாளர் ஆர்.ராஜகோபால் பங்கேற்றனர். கவர்னர் துாய்மையை வலியுறுத்தி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். பின் பலருக்கு ஆங்கிலம் தெரியாததால், தமிழில் உறுதிமொழி வாசிக்க செய்தார். அப்போது 'தமிழ் இனிமையான மொழி' என்றார்.
அவர் பேசியதாவது: ராமரின் பெயரால் அமைந்த ராமநாதபுரம் மாவட்டம், துாய்மையான நகரமாக மாற வேண்டும். மாணவர்கள் முதலில் தங்கள் வீடுகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
அதன் பின் தெருக்கள், குடியிருப்புகளை சுத்தமாக்க முயற்சிக்க வேண்டும். துாய்மை நகரங்களின் பட்டியலில் ராமநாதபுரம் முதலிடம் பெற வேண்டும். துாய்மையாக இருந்தால் மருத்துவ செலவில் 50 சதவீதத்தை குறைக்க முடியும். அரசு சுகாதாரத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது. இதனை குறைக்க துாய்மையை பராமரிக்க வேண்டும்.
பின் அப்பகுதியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டார். பின் அங்கிருந்த கடைக்கு சென்று குப்பை தொட்டி உள்ளதா, என விசாரித்து அறிந்தார். துாய்மை இயக்க கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். பின் துாய்மை ரதத்தை துவக்கி வைத்தார்.


இழப்பீடு கேட்டு மனுமனுக்கள் பெற்ற போது விவசாயிகள் தரப்பில் சோழந்துார் பாலகிருஷ்ணன் மழை பொய்த்து போனதால் மூன்றாண்டுகளாக விளைச்சல் இல்லை. இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.


அனுமதி மறுப்பு ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க கோரி மனு கொடுக்க கருப்பு சட்டையுடன் பெரியார் பேரவையினர் வந்தனர். நேரம் கடந்துவிட்டதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X