ஜவுளி கடையில் 2வது நாளாக சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி கடையில் 2வது நாளாக சோதனை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி:திருச்சி சாரதாஸ் நிறுவனத்தில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி, பெரியகடை வீதியில் செயல்பட்டு வரும் சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் மீது, வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள், காலை முதல் இரவு வரை, சோதனை மேற்கொண்டனர்.கடையின் கதவுகள் அடைக்கப்பட்டு, விற்பனையும் நிறுத்தப்பட்டது. இரவு சோதனையை முடித்து சென்ற வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 9:00 மணிக்கு மீண்டும் ஜவுளிக் கடைக்கு வந்தனர். நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடையின் உள்ளே சில இடங்களில் நேற்றும் சோதனை நடந்தது.இதில், வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X