நிலம் விற்றதில் மோசடி: கூட்டுறவு சங்கம் கலைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலம் விற்றதில் மோசடி: கூட்டுறவு சங்கம் கலைப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருச்சி:திருச்சியில், கூட்டுறவு சங்க நிலத்தை விற்றதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததை அடுத்து, அ.தி.மு.க., நிர்வாகக்குழு அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தில்லைநகரில் உள்ள கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஆயிரம் சதுர அடி நிலம், வெறும், 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், கூட்டுறவு சங்கத்துக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு, நிர்வாகக் குழுவின் தலைவரான, அ.தி.மு.க., பகுதிச் செயலர் கலீலுர் ரகுமான், கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.விசாரணையில், நிர்வாகக் குழுவுக்கு உடந்தையாக இருந்து, கூட்டுறவு சங்க நிலத்தை உரிமை மாற்றம் செய்து கொடுத்த, கூட்டுறவு சங்க செயலர் வேலாயுதம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பல கோடி ரூபாய் இழப்புக்கு காரணமான நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது எனக் கேட்டு, நிர்வாகக் குழு தலைவர், கலீலுர் ரகுமான் உட்பட, 11 பேருக்கு விளக்கம் கேட்டு, ஒரு மாதத்துக்கு முன், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழின் டீ கடை பெஞ்ச் பகுதியில், தொடர்ந்து செய்திகள் வெளியாகின.இந்நிலையில், பதிவுத் துறையின் பதிவாளர் வில்வசேகர், தில்லை நகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து, 8ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.'முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட நிலங்களை மீட்பது குறித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், நிலங்களை வாங்கிய திருச்சி தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X