நிகழ்வை நினவாக்கும் 'ஸ்டிரீட் போட்டோ கிராபி' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிகழ்வை நினவாக்கும் 'ஸ்டிரீட் போட்டோ கிராபி'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அருப்புக்கோட்டை:உலக அளவில் அனைவரும் புகைப்பட கலையை விரும்புகின்றனர். நிகழ்ச்சிகளை நினைவுகளாக பதிவு செய்வது தான் புகைப்பட கலை. ஒவ்வொருவரின் முகபாவங்கள், அசைவுகள், செயற்பாடுகளை புகைப்படமாக பார்ப்பதில் தனி மகிழ்ச்சிதான். ஒரு ஒளிப்படம் நமக்கு பல கதைகள் சொல்லும்.
ஒரு அழகான காட்சியையோ, நல்ல தருணத்தையோ வெறுமனே ரசித்துவிட்டு மட்டும் செல்லாமல் அதை பதிவு செய்து பார்க்கும் போது அதன் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. போட்டோகிராபியில் பலவிதங்கள் உள்ளன. திருமண நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், மருத்துவம் உட்பட பல பிரிவுகளில் படங்கள் எடுக்கலாம். இதற்கென்று தனிதனி நிபுணர்கள் உள்ளனர்.
திருமண நிகழ்ச்சிகளில் தற்போது கேன்டிட் போட்டோகிராபிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் ஒவ்வொருவரின் முகபாவங்களை இயல்பாக படம் எடுத்து அசத்தி வருகின்றனர். தற்போது ஸ்டிரீட் போட்டோ கிராபி செய்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிராமபுறங்கள், தெருக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அதன் தன்மை மாறாமல் இயல்பாக அங்குள்ள இயற்கை வெளிச்சத்தில் பதிவு செய்வது தான் ஸ்டிரீட் போட்டோகிராபி. எந்த பொருளை எடுத்து கொண்டாலும் அதற்கேற்றாற் போல் படங்களை எடுக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.அந்தவகையில் அருப்புக்கோட்டை திருநகரம் ஜோதி ராமலிங்கபுரத்தை சேர்ந்த காளிமுத்து , திருமண நிகழ்ச்சிகளில் கேன்டிட் புகைப்படம் எடுப்பதில் வல்லவர். இவர் ஒரு ஓவியரும் கூட. ஓய்வு நேரங்களில் தன் கேமராவை எடுத்துக்கொண்டு ஸ்டிரீட் போட்டோகிராபி செய்ய கிளம்பி விடுவார். இயல்பான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய எனக்கு பிடிக்கும் என்கிறார் இவர். இவரை வாழ்த்த, 96296 66363.


எண்ணங்களை பிரதிபலிக்குதுதொழில் ரீதியாக திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் படமெடுத்தாலும் தனக்கென்று தனியாக நம் எண்ணங்களை பிரதிபலிக்க புகைப்பட கலைஞர் சில பதிவுகளை படம் எடுத்திருப்பார். இதற்கு ஸ்டிரீட் மற்றும் கேன்டிட் போட்டோகிராபி உதவுகிறது. இயல்பான காட்சிகளை அதன் இயல்பு மாறாமல் கிடைக்கிற 'லைட்டிங்' கில் பதிவு செய்வது புகைப்பட கலைஞனின் திறமையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் ஸ்டிரீட், கேன்டிட் போட்டோகிராபி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விஜயகுமார், புகைப்பட கலைஞர், அருப்புக்கோட்டை


இன்றைய பேஷனாக வலம்போட்டோகிராபியில் பலவிதங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டேஸ்ட் இருக்கும். இன்றைக்கு திருமண நிகழ்ச்சிகளில் கேன்டிட் போட்டோகிராபி முக்கிய வகிக்கிறது. இவற்றை எடுக்க மட்டும் தனியாக நிபுணர்கள் உள்ளனர். எனக்கு விலங்குள், பறவைகளை படம் எடுக்க பிடிக்கும். ஸ்டிரீட் போட்டோகிராபி இன்றைய பேஷன் ஆக உள்ளது. ஏதாவது கான்செப்ட் ஐ எடுத்து கொண்டு அது குறித்தான படங்களை அதன் இயல்பு மாறாமல் எடுக்கின்றனர்.தமிழ்வாணன், உரிமையாளர், மினோ போட்டோ லேப்


நிஜமான பதிவுகள்கடந்த 13 ஆண்டுகளாக ஸ்டிரீட் போட்டோகிராபியில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நான் படமெடுக்க சென்றாலும் இதில் நான் தனி கவனம் செலுத்துகிறேன். இயல்பான மனிதர்கள், நிஜமான முகங்கள், உழைக்கும் வர்கத்தினர் என இவர்களை படமெடுப்பதில் தனி சுகம் கிடைக்கும். தெருக்களில் இயல்பாக நடக்கும் விஷயங்களை அங்குள்ள லைட்டிங்கில் படமெடுப்பது எனக்கு பிடிக்கும். நான் திருமண நிகழ்ச்சிகளில் கேன்டிட் போட்டோ மட்டும் எடுப்பவன். ஆனால் என் மனதிருப்திகாக ஸ்ட்ரீட் போட்டோகிராபி செய்து வருகிறேன்.காளிமுத்து, புகைப்பட கலைஞர், அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X