மாணவர்களுக்கு தெம்பூட்டிய ஜே.சி.ஐ.,: பேச்சு, ஓவியத்தால் வெளிவந்த திறமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு தெம்பூட்டிய ஜே.சி.ஐ.,: பேச்சு, ஓவியத்தால் வெளிவந்த திறமை

Added : ஜன 12, 2019
Advertisement

சிவகாசி:மனிதனாகப் பிறந்தால் மற்றவருக்கும் சமுதாயத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்ற உதவியை சமுதாயத்திற்கு செய்வர்.
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஒரு ஏழைக்கு கல்வி அளிப்பது மிகச் சிறந்த சேவை என்பார்கள். அதாவது பசிக்கு உணவளிப்பதை விட சிறந்தது, கல்வியறிவு அளிப்பது. எத்தனையோ அமைப்புகள் சமுதாயத்திற்காக எத்தனையோ தொண்டுகள் செய்கிறார்கள். ஆனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவது சிலரே.
இந்தியா முழுவதும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். இந்திய நாட்டின் ஆன்மிகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் விவேகானந்தர். சிறந்த இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டவர். இதனாலேயே இளைஞர்களையும், மாணவர்களையும் அழைத்தவர். 100 இளைஞர்களைக் கொடுங்கள் மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்குகிறேன் என்றவர். எழுமின், விழுமின், எண்ணிய லட்சியம் அடையும் வரை உழைமின் என்று சூளுரைத்தவர். எல்லா சக்திகளும் உன் கைகளில்தான் உள்ளது, நீ நினைத்தால் எந்த இலக்கினையும் அடையலாம் என இளைஞர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, வீரத்தை விதைத்தவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விவேகானந்தரின் பிறந்த நாளை சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடியது ஜே.சி.ஐ., சிவகாசி நிலா . மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் விவேகானந்தர் பற்றிய கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று அசத்தினர்.
துணிகளில், அட்டைகளில் விவேகானந்தரின் உருவபடத்தை தத்ரூபமாக வரைந்தும், அவரைப் பற்றி உணர்ச்சிகரமாகவும் பேசினர். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மறைந்த தேச தலைவர்கள் , ஆன்மிக தலைவர்களை மாணவர்கள் தெரிந்து கொள்வர்.

பொன்மொழிக்கேற்ப மாணவர்கள்உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.இந்த பொன்மொழிக்கேற்ப இளைஞர் தினத்தன்று மாணவர்கள் தங்கள் தனித்திறமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தினர். பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு விவேகானந்தர் பற்றிய கருத்துக்களை மிக அழகாக கூறினார்கள்.ஜெயந்தி மஹராஜ், துணை மண்டல தலைவி, ஜே.சி.ஐ.சிவகாசி நிலா


ஆன்மிகம் தெரிந்து கொண்டோம்இதுபோன்ற நிகழ்ச்சிகள் எங்களை உற்சாகப்படுத்துகிறது. விவேகானந்தரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. அவரின் லட்சியமான ஆன்மிகம் பற்றி தெரிந்து கொண்டோம். எங்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியது. மாணவர்களை ஊக்குவிக்கும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும்.ரோகிணி, மாணவி, 9ம் வகுப்பு.


மன தைரியம் கிடைத்ததுபள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இதில் பங்கேற்பதற்காக விவேகானந்தர் பற்றி தேடி தேடி படித்த பின் எனக்குள் இருந்த அச்சம் விலகியது. எதனையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்துள்ளது. கட்டுரைப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றது இன்னும் பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற மன தைரியம் ஏற்பட்டுள்ளது.தீபிகா, மாணவி, 9ம் வகுப்பு.


மேடை பயம் விலகியதுமேடையில் பேசவே தயக்கமாக இருந்தது. ஆனால் விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய மேடைப் பேச்சாளர். ஆளுமைத்திறன் உடையவர் என அவரைப் பற்றி படித்து அறிந்தேன்.இதன் மூலம் எனக்கு மேடை பயம் விலகியது. அச்சமின்றி பேசி பரிசு பெற்றுள்ளேன்.ரோகிணி பாரதி, மாணவி, 6ம் வகுப்பு.


வெற்றிக்கு உதவியாக இருந்ததுதுணிகளில் ஸ்கெட்ச், கலர் பென்சில் வைத்து படம் வரைவேன். இளைஞர் எழுச்சி நாளுக்காக விவேகானந்தரை துணியில் அழகாக வரைந்து பரிசு பெற்றுள்ளேன். பகத்சிங், பாரதியார் என பல தேச தலைவர்களையும் இதுபோல் துணியில் வரைந்து விடுவேன். போட்டிக்காக இன்னும் சிறப்பாக தயாரானேன். இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற உதவியாக இருந்தது.சுதர்சன்,மாணவர், 8 ம் வகுப்பு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X