அறிவும், ஞானமும் தான் பெண்களுக்கு பேரழகு : தூர்தர்சன் இயக்குனர் ஆண்டாள்பிரியதர்ஷினி பேச்சு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவும், ஞானமும் தான் பெண்களுக்கு பேரழகு : தூர்தர்சன் இயக்குனர் ஆண்டாள்பிரியதர்ஷினி பேச்சு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:''அறிவும், ஞானமும் தான் பெண்களுக்கு பேரழகு,'' என, துார்தர்சன் இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார்.கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்லுாரி பாவைவிழாவின்2ம் நாளில் அவர் பேசியதாவது:நான்கு சுவருக்குள் கற்பதல்ல கல்வி. எப்படி வாழவேண்டும் என்ற இலக்கை வெற்றி கொள்ள செய்வது கல்வி. இன்றைய மாணவிகள் ஒவ்வொருவரும் ஆண்டாள்போல் உருவாகவேண்டும்.
ஆண்டாளின் காதல் அரங்கனை கணவனாக அடைவதற்கு அல்ல. தன்வாழ்விற்கான லட்சியத்தை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் பெண்கள் செயல்படவேண்டும். வாழ்வில் நாம் யாராக உருவாகவேண்டும் என முடிவு செய்து, இலக்கை வெற்றி கொள்ளும் நம்பிக்கையை பெண்களுக்கு கற்று தந்தவள் ஆண்டாள். இதை இன்றைய பெண்கள் உணர்ந்து தங்கள் வாழ்க்கை பாதையில் பயணிக்கவேண்டும். பெண் என்பவள் பிரகாசிக்கும் நிலா மட்டுமல்ல, ஒளிதரும் சூரியனாய் திகழவேண்டும். உடையால் வருவதல்ல பேரழகு. அறிவும், ஞானமும் தான் பெண்களுக்கு பேரழகு,என்றார்.
சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிசெல்வி முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரபாகர் வரவேற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் முருகன் , ஆண்டாள்பிரியதர்ஷினி, பேசினர். பேராசிரியர் ராமசந்திரன் குழுவினரின் பட்டிமன்றம் நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார். மதியம் மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. துணைதலைவர் தங்கபிரபு,சிந்துஜாதங்கபிரபு, தொழிலதிபர் மணிவாசகம், முருகன்,இயக்குனர்கள் சபரிமாலா, ராமசாமி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X