புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தெருவிளக்கு எரியவில்லை: கரூர் அருகே காந்திகிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்பும் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதான நிலையில் உள்ளன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை. இரவில் சாலை கும்மிருட்டாக உள்ளதால், மக்கள் நடமாட அஞ்சுகின்றனர். வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

- ஆர்.தாமரைசெல்வன், காந்திகிராமம்.

புத்தாம்பூர் பிரிவில் சிக்னல் தேவை: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புத்தாம்பூர் பிரிவில் சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. முக்கிய சந்திப்பு பகுதியாக இருப்பதால், இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக பள்ளி வாகனங்கள் அதிகம் செல்கின்றன. சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க, விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்ட இடத்தில், சிக்னல் அமைக்க வேண்டும்.

- டி.சக்திவேல், புத்தாம்பூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X