அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காவிரி ஆற்றில் மின்கம்பம் சேதம்: குளித்தலை அடுத்த நாப்பாளையத்தில், காவிரி ஆற்றுப்படித்துறைக்கு செல்லும் வழியில், மின் விளக்கு கம்பம் உள்ளது. குளித்தலை - முசிறி ஈ.வே.ரா., பாலத்தில் செல்லும் பொதுமக்கள், காவிரி ஆற்றில் குளிக்கும் வகையில், இப்படிக்கட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நகராட்சி குடிநீர் தொட்டி மற்றும் ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளது. மின் விளக்கு கம்பம் சேதம் ஏற்பட்டு, முறிந்து விழும் நிலையில் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள், கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
சேதமான நிலையில் தெருபெயர் பலகை: குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாய் மதிப்பில், இரும்புத் தூண் வைத்து, நிக்கல் பலகையில், தெருப்பெயர் பலகை வைக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலான பெயர் பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. சிலவற்றில் தூண் மட்டும் உள்ளது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள், தெருக்கள் செல்லும் பாதை மற்றும் பெயர் தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

அம்மா பூங்கா திறக்கப்படுமா? குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., கீழகுறப்பாளையத்தில், கடந்த ஆண்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவு பெறாத நிலையில் பூங்கா பணி கிடப்பில் போடப்பட்டது. இதேபோல், கூடலூர் பஞ்., பேரூர், தோகைமலை பஞ்., கருப்புசாமி கோவில் அருகே கட்டப்பட்ட அம்மா பூங்கா, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளது. அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

நிழற்கூடத்தில் முட்செடிகள்: குளித்தலை அருகே, அய்யர்மலையில் இருந்து, பணிக்கம்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலையில், ஈச்சம்பட்டி காலனி உள்ளது. அதில் உள்ள பஸ் நிறுத்தத்தில், மேலப்பட்டி, ஈச்சம்பட்டி கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதன் முன், முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில், பொது மக்கள் பாதுகாப்பாக இருந்து பஸ்சுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

சுகாதார வளாகத்தில் மோட்டார் பழுது: குளித்தலை அடுத்த ஆதனூர் கிராமத்தில், பெண்களுக்கான பொதுசுகாதார வளாகம், எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், பெண்கள் குளியலறையும் உள்ளது. இந்த பொதுவளாகத்தில், உள்ள குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வைக்கப்பட்ட, மின் மோட்டார் பழுதாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது. இதனால் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X