பாலத்துக்கு மின் இணைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்துக்கு மின் இணைப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, வாங்கல் - மோகனூர் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்துக்கு மின் இணைப்பு தரும் பணியை, அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதிகளை இணைக்கும் வகையில், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், கடந்த, 2014ல் திறக்கப்பட்டது. ஆனால், பாலத்தில் லைட்கள் இல்லாததால், இரவு நேரத்தில் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், பாலத்தின் இருபக்கமும், விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மின் இணைப்பு தரப்படவில்லை. மின் கம்பங்கள் காட்சிப் பொருளாக இருப்பது குறித்து, நமது நாளிதழில் மீண்டும் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்றிரவு, 7:00 மணிக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர், பாலத்திற்கு மின் இணைப்பை துவக்கி வைத்தனர். அதன் பின், பாலத்தில் இருந்த கம்பங்களில் பொருத்தியிருந்த விளக்குகள் எரியத் துவங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X