எத்தனை ஊராட்சி கூட்டம் நடத்தினாலும் தி.மு.க., வெற்றி பெற முடியாது: அமைச்சர் சாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எத்தனை ஊராட்சி கூட்டம் நடத்தினாலும் தி.மு.க., வெற்றி பெற முடியாது: அமைச்சர் சாபம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''எத்தனை முறை ஊராட்சி கூட்டம் நடத்தினாலும், இனி வரும் எந்த தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெற முடியாது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தெருமுனை பிரசார கூட்டம், செவிந்திப்பாளையத்தில் நேற்றிரவு நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழக மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, ஜெயலலிதா வழியில், முதல்வர் பழனிசாமி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதற்கு உதாரணம்தான், 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய திட்டம். தமிழகத்தில் கிராமம்தோறும், எத்தனை முறை ஊராட்சி கூட்டம் நடத்தினாலும், இனி வரும் தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற முடியாது. ஊராட்சி கூட்டம் என்ற பெயரில், தி.மு.க.,வினர் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு, சரியான பதிலடி தருவோம். அந்த அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை, கடந்த எட்டு ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறோம். கரூர் எம்.பி.,யாக தி.மு.க.,வை சேர்ந்த பழனிசாமி இருந்தபோது, மூன்று முறை மட்டும் லோக்சபாவில் பேசியுள்ளார். ஆனால், தம்பிதுரை லோக்சபா கூட்டம் நடக்கும் போதெல்லாம் தமிழக தேவைகள் குறித்து பேசி வருகிறார். கடந்த காலங்களில், தம்பிதுரையின் பெருமைகளை பேசிய சிலர், தற்போது அவரை குறை கூறுகின்றனர். அதை மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X