தேசிய இளைஞர் தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் தினம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று ஜன. 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மகத்தானது. இந்திய இளைஞர்கள் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும், வளர்ந்த நாடுகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு சிறந்து விளங்குகின்றனர். இருப்பினும் சில எதிர்மறையான எண்ணங்களை கொண்ட இளைஞர்களும் நம்நாட்டில் தான் உள்ளனர். இவர்கள் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அவரைச் சார்ந்திருக்கும் சமூகத்தையே பின்னோக்கி இழுக்கின்றனர்.

விவேகானந்தரின் விருப்பம்: 'இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது, அவர்களது வயது எத்தகைய சவால்களையும் தூக்கி எறிந்து, சாதிக்க கூடியது' என்கிறார் சுவாமி விவேகானந்தர். 'தூய்மை, பொறுமை, விடாமுயற்சி' இந்த மூன்றும் தான் இவர்களுக்கான தாரக மந்திரமாக இருக்க வேண்டும். 'இரும்பு போன்ற தசை', 'எக்கு போன்ற நரம்பு' இளைஞர்களுக்கு வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். 'ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். மேலும் 'நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X