பள்ளிகளில் பொங்கல் விழா: மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பொங்கல் விழா: மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் உள்ள அரசு பள்ளிகளில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மதிக்கோன் பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியை மீனா தலைமையில் பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்காய், கரும்பு, பழம் வைத்து, மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில், ஆசிரியைகள் வனிதா, நிர்மலா, நிஷா, ரோஜா, மோகனப்பிரியா மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.* தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுலக்?ஷனா தலைமையில் பொங்கல் விழா நடந்தது. கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில், மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து மாணவ, மாணவியர் கொண்டாடினர். கட்டுரை போட்டி, பானை உடைத்தல், பாட்டு போட்டி, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியை ஜெயராக்கினி, டாக்டர் ரஜினி கலையரசன் மற்றும் ஆசிரியர்கள் மலர்வேணி, நித்யா, விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.


* கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியப்பன், ஆட்சி அலுவலர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக வளாகத்தின் முன், கரும்பு, மஞ்சள் வைத்து பெரிய பானையில் பொங்கல் வைத்து அலுவலர்கள், ஊழியர்கள் படையல் வைத்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன், வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X