வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், வேளாண்மை விரிவாக்க மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்பட்டு வந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பூட்டப்பட்டதால், அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வரும் விவசாயிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி மைய பகுதியாக உள்ளதுடன், பஸ் வசதியும் உள்ளது. தற்போது, ஏ.பள்ளிப்பட்டியில் செயல்படுவதால், நீண்ட தூரம் செல்வதுடன் நேரம் மற்றும் பணம் விரயமாகிறது. மேலும், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, ஏ.பள்ளிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சிலரை, பாப்பிரெட்டிப்பட்டி அலுவலகத்தில் பணியமர்த்தி தொடர்ந்து, செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X