தமிழக அரசு செயல் இழந்து விட்டதாக தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு செயல் இழந்து விட்டதாக தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் கரடிகுறியில், மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் பஞ்சாயத்து சபை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இதில் பேசிய கிராம மக்கள், எண்ணேகொல்புதூரில் இருந்து, படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரடிகுறியில் சாக்கடை வசதி இல்லாமல், கழிவுநீர் சாலையில் ஓடுவதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் பேசுகையில்,'' தமிழக அரசு செயலிழந்து பல நாட்கள் ஆகிவிட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், பதவியை காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு அமைச்சரும் போராடி வருகின்றனர். இதுபோன்ற அவல நிலை மாற, அனைத்து மக்களும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X