பொது செய்தி

இந்தியா

சிபிஐ புதிய இயக்குனர் : 4 பேரின் பெயர்கள் பரிந்துரை

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
சிபிஐ இயக்குனர், அலோக் வர்மா, பரிந்துரை, தேர்வுக்குழு

புதுடில்லி : சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீழணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன.

இவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் ஒய்.சி.மோடி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறுதி பட்டியலில் 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரை பட்டியல் பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா பதவியேற்றுக் கொண்டார். நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தவர்களை அதே பணிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.,11) நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்திற்குப் பின், சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அலோக் வர்மா தீயணைப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இப்பொறுப்பில் ஒருநாள் கூட பணியை ஏற்க மறுத்துவிட்ட அலோக் வர்மா அரசுக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை இடைக்கால தலைவராக நாகேஸ்வரராவ் செயல்பட உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
12-ஜன-201916:20:43 IST Report Abuse
S.P. Barucha 125 கோடி இந்திய மக்களின் மானப்பிரச்சனை இதை புரிந்து கொண்டு பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மத்திய தேர்வுக்குழு செயல்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
12-ஜன-201912:36:09 IST Report Abuse
siriyaar அலேக் வர்மா நியமிக்கும் போது நேர்மையானவர் அவரை கார்கே எதிர்த்தார். நடுவில் மல்லையா அவரை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அடிமையாக்கி விட்டார் ஆகவே மோடி நீக்கறார் கார்கே எதிர்க்கிறார் இப்ப.
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
12-ஜன-201912:14:07 IST Report Abuse
Rajavelu E. ஜால்ரா அடிக்க கூடிய ஆள் கண்டிப்பா கிடைப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X