மாணவ, மாணவியர்களுக்கு மொபைல் கவுன்சிலிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவியர்களுக்கு மொபைல் கவுன்சிலிங்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கோபி கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பினருக்கு, மொபைல் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்பினருக்கு, கவுன்சிலிங் வழங்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடமாடும் மையம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு உண்டான, வாகனம் கோபி அருகே கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. உளவியல் நிபுணர் சங்கீதா, மாணவ, மாணவியருக்கு, கவுன்சிலிங் வழங்கினார். அருள்முருகன் உடனிருந்தார். தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, மனநலம் பற்றிய விழிப்புணர்வு, ஞாபக மறதி, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னை, ஒழுக்கம், போதை பொருட்கள் குறித்த விழிப்பு வழங்கினர். மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும், தலா 45 நிமிடம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இந்த கவுன்சிலிங்கில், பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X