பொது சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு திறப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடுமுடி: 'தினமலர்' செய்தி எதிரொலியால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பிடம் திறக்கப்பட்டது. கொடுமுடி யூனியன், நஞ்சை கொளாநல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில், கடந்த ஆறு வருடங்களுக்கு முன், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், செப்டிக் டேங்க் நிரம்பியதால், சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுகுறித்து, நமது 'தினமலர்' நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன், பொதுசுகாதார வளாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X