தியாகி குமரனுக்கு அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியாகி குமரனுக்கு அஞ்சலி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னிமலை: சென்னிமலையில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தனது உயிரை தியாகம் செய்த, தியாகி கொடிகாத்த குமரனின், 87வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னிமலையில் உள்ள தியாகி குமரன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில், ஈரோடு எம்.பி., செல்லகுமார சின்னையன், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., தனியரசு, உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வெள்ளகோவில் சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், உட்பட தி.மு.க.,வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ், வட்டார தலைவர் பனியம்பள்ளி சிவக்குமார், உட்பட காங்கிரசார், பெரும் திரளாக கலந்து கொண்டு, திருப்பூர் குமரன் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். த.மா.கா., சார்பில், காங்கேயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் தலைமையில், பலர் கலந்துகொண்டனர். ரஜினி மக்கள் மன்ற சென்னிமலை ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பா.ம.க., சார்பில் மாநில துணை தலைவர் வடிவேல் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னிமலை ஊர்மக்கள் சார்பில், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், திருப்பூர் குமரன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X