கோவிலை அரசு ஏற்று நடத்த பேச்சுவார்த்தையில் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை அரசு ஏற்று நடத்த பேச்சுவார்த்தையில் முடிவு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அடுத்த, ஜர்த்தல் பகுதியில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நிர்வாகம் மற்றும் சொத்துகள் பராமரிப்பது தொடர்பாக, கடந்த ஒரு வருடத்துக்கு முன், பிரச்னை இருந்தது. இது குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கோபி, ஆர்.டி.ஓ., உத்தரவின்படி, கடந்த 5ல், கோவில் தொடர்பான, மூன்று தரப்பினர் அழைக்கப்பட்டு, அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சுமூகமான தீர்வு ஏற்படாத நிலையில், நேற்று காலை, மீண்டும், இந்த பேச்சுவார்த்தை நடந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில், கோவிலை சேர்ந்த, மூன்று தரப்பினரும் கலந்து கொண்டனர். முடிவில், கோவிலுக்கு சொந்தமான, 54 பவுன் தங்க நகைகள், 1.40 லட்சம் ரூபாய், பவானி இந்து அறநிலைத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைத்து, இனி இக்கோவில் நிர்வாகம், அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்க, முடிவானது. இந்த பேச்சுவார்த்தையின்போது, ஜர்த்தல் பகுதியை சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள், தாலுகா அலுவலகம் வெளியே காத்திருந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X