'அனைவருக்கும் பொங்கல் பரிசு: கோர்ட் தீர்ப்பால் மக்கள் மகிழ்ச்சி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அனைவருக்கும் பொங்கல் பரிசு: கோர்ட் தீர்ப்பால் மக்கள் மகிழ்ச்சி'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: ''அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கலாம் என்ற, நீதிமன்ற தீர்ப்பு, மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது,'' என, அமைச்சர் கருப்பணன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானி, தளவாய்பேட்டை அரசு பள்ளியில், நடந்த விழாவில், மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கருப்பணன் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர மக்கள், பொங்கலை சிறப்பாக கொண்டாட, அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும், 100 ரூபாய் ஆகியவற்றை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தற்போது, முதல்வர் பழனிசாமி, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாயை, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். இதை பொறுக்காத எதிர்கட்சியினர், அரசுக்கு, அவப்பெயர் ஏற்படுத்த, உயர்நீதிமன்றத்தை நாடி, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய், அனைவருக்கும் தரக்கூடாது என்ற, தீர்ப்பை பெற்றனர். தமிழக அரசு, நீதிமன்றம் சென்று, பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து, இன்று, தீர்ப்பில் வெற்றியும் பெற்றுள்ளது. தமிழக அரசுக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கே, இன்று அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் மக்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X