தினகரன் ஊழல் பேர்வழி: அன்பழகன் காட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஊழல் பேர்வழி: அன்பழகன் காட்டம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தர்மபுரி: ''தினகரன் ஒரு ஊழல் பேர்வழி. என் மீது குற்றச்சாட்டு சொல்ல, அவருக்கு தகுதியில்லை,'' என, அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தர்மபுரி அடுத்த, பாளையம்புதூர் மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு, கடந்த, 1963ல் கட்டப்பட்டது. இந்த அணை, 20 ஆண்டுகளாக பழுதாகி இருந்த நிலையில், 2.95 கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் அன்பழகன் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரி உபரிநீரை, அதிக உந்து சக்தியுள்ள மின்மோட்டர்கள் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஏரி குளங்களுக்கு நிரப்புவதற்கான திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்போடு உள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை, ஏரிகளுக்கு நிரப்பும் எண்ணேகொல், தும்பலஹள்ளி நீர்பாசன திட்டத்தை, தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அரசானை விரைவில் வெளியிடப்படும். பாலக்கோடு சட்டசபை தொகுதியில், நான் வளர்ச்சி திட்ட பணிகள் ஏதும் செய்யவில்லை என்று, என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல, தினகரனுக்கு தகுதியில்லை. அவரே ஒரு ஊழல் பேர்வழி; அவர் மீதுள்ள குற்றச்சாட்டை மறைக்கவே, இவ்வாறு பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட தினகரன், 11 ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று தெரியவில்லை. மேலும், தேர்தலை சந்திக்க எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X