பொது செய்தி

இந்தியா

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது : தேர்தல் கமிஷன்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தேர்தல் கமிஷன், சமூக வலைதளங்கள், கருத்துக்கள், மும்பை ஐகோர்ட்

புதுடில்லி : சமூக வலைதளங்களில் அரசியல் கருத்து தெரிவித்தால் அதை தடுக்க முடியாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து தேர்தல் விளம்பரங்கள், அரசியல் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சாகர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணையின் போது , அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு விளம்பரங்களோ, பிரசாரமோ செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தனிநபர் தனது வலைப்பதிவிலோ அல்லது சமூகவலைதளங்களிலோ தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் போது அவர்களை தேர்தல் கமிஷனால் எப்படி தடுக்க முடியும் என தேர்தல் கமிஷன் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
12-ஜன-201914:52:45 IST Report Abuse
Gideon Jebamani Thanks for understanding and acceptance of this truth. BJP's fascism doctrine cannot last long. When you accept appriciation, also welcome criticism to analyze where you are wrong. Social media helps you to know the pulse of the people. Moreover you cannot stop the freedom of expressions. Communication has been Globalized now. So any political party shall understand this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X