'அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டு வரப்படும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டு வரப்படும்'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: ''அரசு பள்ளிகளில், நீதிபோதனை வகுப்புகள் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியர், 494 பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி, பேசியதாவது: கல்வித்துறைக்கு, தனியாக சேனல் உருவாக்கப்படும். மாணவர்கள், பெற்றோரை நேசிக்கவும், ஆசிரியரை குருவாக நேசிக்கவும், தேசப்பக்தி உள்ளவர்களாக உருவாக்க, இந்த சேனல் பயன்படும். பெரியவர்களையும், பெற்றோரையும் நேசிப்பது, இன்று குறைந்து வருகிறது. தனிக்குடும்ப சிந்தனை, அனைவருக்கும் இருக்கிறது. பெற்றோர், தங்கள் முதுமையில், பேரக்குழந்தைகளை காண தவிக்கின்றனர். பாசத்தோடு வாழ்க்கையில் நாம் நடை போட வேண்டும். இவை, அனைத்து கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக, ஒரு காலத்தில் இருந்த, நீதிபோதனை என்ற வகுப்பு, மீண்டும் கொண்டு வரப்படும். க்ஷஇதற்கான, புத்தகங்கள் வடிவமைக்கப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தலுக்கு முன்பே தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ஒன்று முதல், பிளஸ் 2, வகுப்பினருக்கு, முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வு நடத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த நாளில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டல், குறித்த விபரங்கள், பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், ஈரோடு கலெக்டர் கதிரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X