முன்னாகள் படைவீரர் நல அலுவலகத்துக்கு சொந்தமான கடைக்கு சீல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாகள் படைவீரர் நல அலுவலகத்துக்கு சொந்தமான கடைக்கு சீல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு சொந்தமான கடைக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை ரவுண்டானா அருகில், முன்னாள் படைவீரர் நலத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில், ஏழாம் எண் கடையை, 1974ல், அப்துல்ரசாக் என்பவர் வாடகைக்கு எடுத்தார். அவர் இறந்த பின், நான்கு தலைமுறைகளாக அவரது குடும்பத்தினர் கடையை நடத்தி வந்தனர். தொடர்ந்து, ஒரே குடும்பத்தினருக்கு கடையை வாடகைக்கு விடக்கூடாது என்பதால், காலி செய்யும்படி கடந்த, 10 ஆண்டுகளாக முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடையை காலி செய்யவில்லை. இதையடுத்து, கிருஷ்ணகிரி நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 மார்ச், 1ல் கடையை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், காலி செய்யாததால், 10 நாட்களுக்கு முன்பு கடைக்கு சீல் வைப்பதாக நோட்டீஸ் ஒட்டினர். இதையடுத்து நேற்று காலை டி.எஸ்.பி., கண்ணன், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரேமா, ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சேகர் முன்னிலையில், கடையில் இருந்த பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X