'ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை அ.தி.மு.க., அரசு கண்டுபிடிக்கட்டும்' - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஜெ., மரணத்திற்கு காரணமானவர்களை அ.தி.மு.க., அரசு கண்டுபிடிக்கட்டும்'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராணிப்பேட்டை: ''ஜெ., மரணத்திற்கு காரணமானவர்களை முதலில், அ.தி.மு.க., அரசு கண்டுபிடிக்கட்டும்,'' என, தி.மு.க., மாஜி அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற மாஜி அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் அறிவித்து விட்டு, பின் அதை நிறுத்த வழக்கு தொடுக்கப்பட்டு, மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆளும் அரசே யார் மீதாவது பழி போட வழக்கு போட்டுள்ளது. 'ஜெயலலிதா மரணத்திற்கு காரணமாவர்கள், அ.தி.மு.க., அரசால் தண்டிக்கப்படுவர்' என, அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். முதலில் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமாவர்களை, அ.தி.மு.க., அரசு கண்டுபிடிக்கட்டும். தண்டிப்பதை பிறகு பாருங்கள். தற்போது, தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் குறைகளை கேட்டாலே அவர்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X