பொது செய்தி

இந்தியா

விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு உதவினாரா அலோக் வர்மா?

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (31)
Advertisement
அலோக் வர்மா, விஜய் மல்லையா, நீரவ் மோடி, சிவிசி, சிபிஐ

புதுடில்லி : முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி, சிவசங்கரன் உள்ளிட்டோருக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலோக் வர்மா மீது மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஏற்கனவே 10 குற்றச்சாட்டுக்களை கூறி இருந்த நிலையில், தற்போது மேலும் 6 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இதில், பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி தொடர்பாக ரகசிய இமெயில்களை கசிய விட்டது, விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக்அவுட் சுற்றறிக்கையை நீர்த்து போக செய்தது, இதே போன்று ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய ஏர்செல் புரோமோட்டர் சி.சிவசங்கனுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசையும் நீர்த்து போக செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இவை முதல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தப்ப காரணமா:

இந்த புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு சிவிசி கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தகவல் தெரிவித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அலோக் வரக்மாவிற்கு எதிரான வழக்குகள், அது தொடர்பான ஆவணங்களை சிபிஐ கேட்டதாக சிவிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லுக்அவுட் நோட்டீஸ்கஸ்களை அலோக் வர்மா நீர்த்து போக செய்ததாலேயே நீரவ் மோடி, விஜய் மல்லையா, சிவசங்கரன் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சிவிசி குற்றம்சாட்டி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12-ஜன-201918:42:26 IST Report Abuse
BoochiMarunthu Alok Verma was not in CBI when Vijay Malaya left . He joined cbi one year after Mallaya left.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜன-201916:58:38 IST Report Abuse
Nallavan Nallavan ஆளுங்கட்சிக்கோ, கூட்டணிக்கோ தெரியாமல் உதவ முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
Ramgopal Rajagopalan - AMK,சிங்கப்பூர்
12-ஜன-201914:15:32 IST Report Abuse
Ramgopal Rajagopalan , CVC - Central Vigilance Commission - மத்திய கண்காணிப்பு ஆணையம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X