மகா கூட்டணி கேலிக்கூத்து: பிரதமர் மோடி

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (56)
Advertisement
பிரதமர் மோடி, காங்கிரஸ், பா.ஜ., விவசாயிகள்

புதுடில்லி: மகா கூட்டணி என்பது கேலிக்கூத்தானது எனவும், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை என பிரதமர் மோடி கூறி உள்ளார்.ஒரு தனிநபருக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளது இது தான் முதல்முறை எனவும் கூறினார்.


மக்களின் நம்பிக்கை


டில்லியில் நடக்கும் பா.ஜ., தேசிய செயற்குழுவின் 2வது நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லாமல் நடக்கும் முதலாவது தேசிய செயற்குழு கூட்டம் இது. அவரின் பணிகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்கள் தான் பாஜ.,வின் பலம். நம்மை பொறுத்தவரை முதலில் நாடே முக்கியம். பிறதே கட்சி.

பெண்கள், விவசாயிகள் அதிகாரம் பெறவும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பா.ஜ., உழைத்து உள்ளது. தேசத்தை பா.ஜ., உச்சத்திற்கு எடுத்து செல்லும். மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியுள்ளோம்.


குற்றச்சாட்டு இல்லை

கடந்த காலங்களில், நாட்டை காங்கிரஸ் சீரழித்தது. 2004 -14 வரை ஊழல் மட்டுமே நடந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்தனர். ஆனால், நாம் நாட்டை இருளில் இருந்து மீட்டுள்ளோம். நேர்மையான ஆட்சியை நினைவாக்கினோம். மக்களின் வரிப்பணம் நேர்மையாக செலவு செய்ததை உறுதி செய்துள்ளோம். நம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை . நேர்மையை நோக்கி நாடு செல்கிறது. இதனை பா.ஜ., முன்னெடுத்து செல்கிறது.


இளைஞர்களே பலம்


அனைத்து சமுதாயத்தினரையும் சமமாக நடத்தினோம். இட ஒதுக்கீடு முறை இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஏழை குடிமக்கள் மத்தியில் இட ஒதுக்கீடு மசோதா நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.சம வாய்ப்பு, வேறுபாடு கூடாது என்பவையே இன்றைய முக்கிய தேவை. . இட ஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் குறித்து தொண்டர்கள் விளக்க வேண்டும். புது மசோதா அனைத்து பிரச்னைகளை தீர்த்துவிடாது என்றாலும் அதற்கான துவக்கமாக இருக்கும். அரசு தங்களுடன் உள்ளதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். இளைஞர்களே நமது பலம். அவர்களை ஆதரிப்பது தொடரும் .


தொடரும்


விவசாயிகள் நலனுக்காக பா.ஜ., அரசு உழைத்துள்ளோம். கடந்த காலங்களில் விவசாயிகளை, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க உழைத்து வருகிறோம். விவசாயிகளுக்காக போராடுவது தொடரும்.குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதனை நாம் தான் செய்துள்ளோம். 95 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளோம்.
@subtitle@புதிய பாதை


பா.ஜ., ஆட்சியில் சுய உதவிக்குழுவினர் ஊக்குவிக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்க்கட்சிகள் குறை கூறின. வெளிப்படை தன்மையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளோம். தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தவே காங்கிரஸ் விரம்புகிறது. திட்டங்களின் பெயர்களை மாற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், காங்கிரசை போல், எந்த திட்டத்திலாவது எனது பெயர் சூட்டியுள்ளேனா?இந்தியாவின் நிலையை பா.ஜ., அரசுமாற்றி உள்ளது. புதிய பாதை அமைத்துள்ளது.


கேலிக்கூத்து


கடந்த ஆட்சியில் பொது மக்களின் பணம் தனியார் சொத்துகளாக மாற்றப்பட்டன. மோசடி நபர்களுக்கு கடன் வழங்க காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி அளிக்கப்பட்டது. கணக்கில்லாமல் கடன் கொடுக்கப்பட்டன. மகா கூட்டணி என்பது கேலிக்கூத்து. சொந்த வாக்காளர்களையே காங்கிரஸ் அவமானபடுத்தியது. 2ஜி , நிலக்கரி ஊழல் போன்றவை தொடர வேண்டும் என்பதற்காக நிலையான அரசு வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது.

என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் கைகோர்த்துள்ளனர். கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் இந்த கூட்டணி தோல்வியடைந்து உள்ளது. நீதித்துறை நடவடிக்கைகளில் காங்கிரஸ் இடையூறு செய்கிறது. ராமர்கோயில் விவகாரத்தில் காங்கிசால் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-201911:04:56 IST Report Abuse
ramu narayanan why you have big alliance in Bihar? Go alone and prove your govt performance? Are you worried abt wash out? Contest alone and talk.
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
12-ஜன-201922:48:55 IST Report Abuse
Rajan //மக்களின் வரிப்பணம் நேர்மையாக செலவு செய்ததை உறுதி செய்துள்ளோம். நம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை . நேர்மையை நோக்கி நாடு செல்கிறது. இதனை பா.ஜ., முன்னெடுத்து செல்கிறது// அதுனாலதான் மோடி என்ற ஒருவரை எதிர்த்து அனைவரும் கைகோர்ப்பு என்பது திண்ணம்.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
12-ஜன-201922:05:27 IST Report Abuse
ராஜேஷ் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பிளாட்போட்டு விற்கும் , விஜிபி குரூப்க்கு ஜால்ரா போடுறீங்க அப்புறம் விவசாயிகளின் பாதுகாவலன்ன்னு தம்பட்டம் அடிக்கிறது கேலிக்கூத்து இல்லையா ? நீங்கள் வைத்திருக்கும் உறவுகள் விஷப்பாம்பைவிட மோசமானது . இதுவரை லஞ்சம் ஊழல் என்று அடுத்தவரை சுட்டிக்காட்டிய விரல். உங்களை சுட்டிக்காட்ட போகுது உஷார் பிரதமரே
Rate this:
Share this comment
Yuva Rajan - chennai,இந்தியா
13-ஜன-201912:30:33 IST Report Abuse
Yuva Rajanஉங்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்படும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X