ரோகித் சதம் வீண்: 34 ரன்னில் இந்திய அணி தோல்வி| Dinamalar

ரோகித் சதம் வீண்: 34 ரன்னில் இந்திய அணி தோல்வி

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, தோல்வி, ரோகித் சர்மா

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோகித் சர்மா சதம் வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது இடம் பெற்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், அலெக்ஸ் கேரி துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய போட்டியின் 2.2வது ஓவரில் பின்ச் (6) போல்டானார். கலீல் அகமது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கேரி புவனேஷ்வர் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். குல்தீப் ஓவரில் பவுண்டரி அடித்த கேரி (24), அதே ஓவரில் அவுட்டானார்.

அடுத்து இணைந்த ஷான் மார்ஷ், கவாஜா ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலிய அணி 23வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. கவாஜா ஒருநாள் அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா சுழலில், கவாஜா (59) சிக்கினார்.

மறுபக்கம் வேகமாக ரன்கள் சேர்த்த ஷான் மார்ஷ், தனது 13வது அரைசதம் எட்டினார். இவர் 54 ரன்னுக்கு குல்தீப் சுழலில் வீழ்ந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (73) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (11), ஸ்டாய்னிஸ் (47) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 2, புவனேஷ்வர் குமார் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.


ரோகித் சதம்


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (0), கோஹ்லி (3), அம்பதி ராயுடு (0) அதிர்ச்சி தந்தனர். தோனி 51 ரன்னுக்கு அவுட்டானார். சிடில் வீசிய 39 வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 22வது சதம் அடித்தார்.

தினேஷ் கார்த்திக் (12), ஜடேஜா (8) சீரான இடைவெளியில் கிளம்பினர். அடுத்து ரோகித் சர்மா 133 ரன்னுக்கு அவுட்டாக இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒருநாள் தொடரில் 0-1 என பின் தங்கியது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 15ம் தேதி அடிலெய்டில் நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
13-ஜன-201901:34:28 IST Report Abuse
Girija கேதார் ஜாதவ் வை ஓரங் கட்டியதால் வந்த வினை மாற்று பௌலர் இல்லை கடைசி இரண்டு ஒவேர்கலில் முப்பது ரன் கொடுத்ததால் தோல்வி. அனுமன் விஹாரி யை சேர்த்திருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201919:30:29 IST Report Abuse
முக்கண் மைந்தன் "தெருவில் ஒப்பாரி" : BCCI இந்தியா team மு இல்ல... It's a private & autonomous body... வெள்ளாட்டுல நானு நாட்டெ பாக்கறதில்ல, வெள்ளாட்டாதான் பாப்பேன் நானு... Sri Lanka தான் என்னோட favourite team மு...👏👏👏
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201919:25:32 IST Report Abuse
sura Gopalan madeen சந்தோஷமாக இருப்பான்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஜன-201905:14:56 IST Report Abuse
Sanny யோவ் இதிலும் ஜாதி, சமயமா? அவங்க சும்மா இருந்தாலும் உங்கமாதிரி ஆளுங்க வம்புக்கு இழுப்பதே பிழைப்பாக போச்சு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X