'பழசை' மாயா மறந்தது எப்படி?

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (22)
Advertisement
மாயாவதி, அகிலேஷ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, உத்தர பிரதேசம், உ.பி., பா.ஜ., பாஜ, கூட்டணி, காங்கிரஸ், ராகுல், சோனியா,அமேதி, ரேபரேலி, முலாயம் சிங்,

புதுடில்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, 1995 ஜூன் 2ம் தேதி நடந்த மோசமான சம்பவத்தை எப்படி மறந்தார் என பலர் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.


என்ன நடந்தது


அந்த நாளில் தான், உ.பி., முதல்வர் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்துவிட்டு, லக்னோவில் உள்ள மீராபாய் கெஸ்ட் ஹவுசில் கட்சி எம்எல்ஏக்களுடன் மாயாவதி ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். ஆதரவு வாபசால் கொந்தளித்த சமாஜ்வாதி தொண்டர்கள், கெஸ்ட் ஹவுஸ் மீது தாக்குதல் நடத்தினர். மாயாவதி இருந்த அறையை அடித்து நொறுக்கி, அவரை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அறையில் இருந்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கூட மாயாவதியை காப்பற்ற முடியவில்லை. ஆனால், பா.ஜ,., எம்.எல்.ஏ., பிரம்ம தத் திவேதி என்பவர் அங்கு வந்து மாயாவதியை பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த நாள் இந்திய அரசியல் வரலாற்றில் மிக மோசமான நாளாக கருதப்படுகிறது.


பா.ஜ., ஆதரவில் மாயா


இதன் மூலம் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியும் முடிவுக்கு வந்தது. முலாயம் அரசும் வீழ காரணமானது. இவை அனைத்தும் ராம ஜென்மபூமி விவகாரம் உச்சத்தில் இருந்த காலகட்டத்திற்கு பின் நடந்தது. கெஸ்ட் ஹவுவுசில் இந்த சம்பவம் நடந்த பிறகு, பாஜ., ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைத்தார்.

இது நடந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு, பகுஜன்சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஆண்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்து கோரக்பூர் மற்றும் புல்புர் லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடித்தனர். இதனால், பா.ஜ.,வை தடுக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து உள்ளன.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மாயாவதி கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சமாஜ்வாதியும் பல தொகுதிகளை இழந்தது.இந்நிலையில், இன்று (ஜன.,12) லக்னோவில், மாயாவதியும், அகிலேசும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டணி குறித்து அறிவித்தனர்.


சரிசமமாக போட்டி


உ.பி.,யில் 80 தொகுதிகள் உள்ளன. இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 2 தொகுதிகள், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள கட்சிக்கு ஒதுக்கி உள்ளனர். ரேபரேலியில் சோனியாவும், அமேதியில் ராகுலும் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கு போட்டியிட போவது இல்லை என அறிவித்து உள்ளனர்.

பத்திரிகையாளர்களை சந்தித்த போது, இருவரும், பா.ஜ.,வை கடுமையாக தாக்கினர். மாயாவதி கூறுகையில், காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.

அப்போது, காங்கிரசை அகிலேஷ் அதிகம் விமர்சனம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்த பிரதமராக மாயாவதிக்கு வெளிப்படையாக ஆதரவும் தெரிவிக்கவில்லை. உ.பி.,யில் இருந்து அடுத்த பிரதமர் வர வேண்டும் என தான் விரும்புவதாக கூறினார். இது, அவரது தந்தை முலாயமாகக் கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி, பா.ஜ.,வுக்கு பெரிய சவாலாகவே இருக்கும். 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி 43.3 சதவீத ஓட்டுக்கள் பெற்று, உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளில் 73ல் (90 சதவீதம்) வெற்றி பெற்றது. இந்தளவு ஓட்டுகள் கிடைக்க, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆர்எல்டி கட்சிகள் ஓட்டுகளை பிரித்ததே காரணம். சட்டசபை தேர்தலில், இதே காரணத்தினால், தேசிய ஜனநாயக கூட்டணி 41.4 சதவீத ஓட்டுகள் பெற்றது. ஆனால், 80 சதவீத தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த முறையும் காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி, பகுஜன் சமாஜ், ஆர்எல்டி, நிஷாத் கட்சிகள் ஓட்டுகளை பிரித்தன.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
13-ஜன-201905:53:48 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒன்னு மலைமுழுங்கி மற்றது உலகையே முழுங்கும் பிராடு பிராடுபிராடுக்கும் கூட்டா சுத்தம் , மக்கள் நேர்மையான் ஆட்ச்சியே தேவை என்கிறான் நிச்சயம் அவர்கள் வோட்டு பிஜேபி க்குத்தான் இந்து சத்தியம் , கூடடணி என்று சொல்லும் இவா ஏவாளும் மக்களை மனுஷாளாவே எண்ணாத சுயநலம் பிடிச்ச நரகம்களே
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
13-ஜன-201901:12:35 IST Report Abuse
yaaro For saving mayawati, Brahm datt was ed later by samajwadi goons. His funeral was atted by vajpayee.
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
12-ஜன-201923:40:02 IST Report Abuse
சிற்பி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. பீஷ்மரையே வீழ்த்திதானே அர்ஜுனன் வெல்ல வேண்டி இருந்தது. துரோனாச்சர்யரை கொன்று தானே பாண்டவர்கள் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால் தர்மத்தின் பக்கம் அவர்கள் இருவரும் இல்லாததால் தான் அவர்கள் இருவரும் வீழ்த்தப்பட்டனர். இங்கே அர்ஜுனன் யார்? பீஷ்ம துரோணர்கள் யார்? என்று முடிவு செய்வது மக்களே. இந்திய தேர்தலை பொறுத்த மட்டில் மக்களுக்கு இன்னும் நிறையவே தெளிவு வரவேண்டும் என்பது எனது கருத்து. என்னதான் திட்டங்கள் போட்டு எல்லாம் செய்தாலும், கையில் பத்து ரூபாவ கொடுங்க சலாம் போட்டு அரசு கஜானாவையே திறந்து விடும் சேவகனாக தான் இன்றும் மக்களில் பலர் இருக்கின்றனர். காசு கொடுப்பதில் இப்போதைய எதிர் கட்சிகள் வல்லவர்கள். ஆனால் சாணக்கியத்தனத்துடன் அணுகினால் மட்டுமே இந்த மக்களை ஏமாற்றி அரசு பணத்தை உறிஞ்சு தனக்காகவும் தன குடும்பம் வாழவும் உலகில் எல்லா இடங்களிலும் தன பரம்பரைக்காகவும் சேர்த்து பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகளை இனம் கண்டு கொண்டு அவர்களை இந்திய அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும். எத்தனை கூட்டணி வந்தால் என்ன ? வரட்டும். பார்க்கலாம். மோடியே வெல்வார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X