மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement
மேகதாது, தமிழகம், கர்நாடகா, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு, பதில் மனு

புதுடில்லி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.


வழக்கு


மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.


பதில்மனு


இந்த மனுவுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்கு கொடுத்த அனுமதி கிடையாது. எனவே, இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரானது அல்ல. தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல. ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே, அந்த அணை தேவைதானா என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள்.

பின், அந்த அறிக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்படும். இதன் பின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திட்டத்தை, காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும்.

ஆகவே இப்போது அளிக்கப்பட்டு உள்ள அனுமதி விரிவான திட்ட அறிக்கைக்கு தான். அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. மேகதாது அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகாவின் கருத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு ஆலோசனை நடத்தப்படாது. விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது.

அணை கட்டுவதற்கான அனுமதியே, வழங்காத போது தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஆதாரமற்றது. அவர்கள் கூறும் தகவல்கள் ஏற்று கொள்ளக்கூடியவை அல்ல. இதனால், தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201921:50:41 IST Report Abuse
Bhaskaran நாங்க அப்படிதான் சொல்வோம் ஆனால் கர்நாடகா அவர்கள் பாட்டுக்கு முதலில் ஆய்வு அப்புறம் நிலத்தை சமன் செய்தால் அதற்கடுத்து தளவாட சாமான்களை அணைக்கட்டும் இடத்தில கொண்டுசேர்த்தால் என்று ஒன்றன் பினொன்றாக செய்துகொண்டிருப்பார்கள் மத்திய அரசு வெறும் வேடிக்கையும்பார்க்கும், அறிக்கையை விடும் அவ்வளவுதான் ஏமாந்தவன் தமிழன்தான் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் துணிந்து அணைகட்ட ஆரம்பிப்பர்கல்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201921:44:12 IST Report Abuse
Pugazh V பொய் சொல்வது பாஜக விற்கு புதிதா என்ன?
Rate this:
Share this comment
13-ஜன-201908:13:00 IST Report Abuse
மதிநி எந்த பொயை சொல் கி றா ய்...
Rate this:
Share this comment
rao - ,
13-ஜன-201912:40:10 IST Report Abuse
raoThis affidavit is filed in Supreme Court and govt cant lie.Later if its found lie TN can take contempt action against officials at centre....
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-ஜன-201921:28:55 IST Report Abuse
M.COM.N.K.K. காவிரி பிரச்சனையில் மத்தியஅரசு எந்த தவறும் செய்யவில்லை எந்த குடைச்சலையும் மத்திய அரசு செய்யவில்லை ஒரு தாயிக்கு எல்லா குழந்தைகளுமே சமம்தான் .உண்மையான தாய் அதைத்தான் நினைப்பாள்.எந்த குழந்தைக்கும் சாதகமாக அவளால் இருக்கமுடியாது .அதே போல்தான் காவிரி பிரச்னையும்.அணைத்து குழந்தைகளும் ஒன்றே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X