பொது செய்தி

இந்தியா

பந்தளத்தில் துவங்கியது திருவாபரண பவனி

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
திருவாபரண பவனி, சபரிமலை, மகரஜோதி

சபரிமலை: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரவிளக்கு நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து புறப்பட்டது.

சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. 14ம் தேதி மாலை, மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மகரவிளக்கு நாளில், பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் ஆபரணங்கள், அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (12ம் தேதி)காலை, 5:00 மணிக்கு, பந்தளம் அரண்மனையில் இருந்து, திருவாபரணங்கள், பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பிற்பகல், 12:30 மணிக்கு, பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. அந்த நேரத்தில், ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரண கோஷங்கள் முழங்க, பிற்பகல், 1:00 மணிக்கு, திருவாபரண பவனி புறப்பட்டது. திருவாபரண பெட்டிகளை, குருசாமி, கங்காதரன் தலைமையில், 23 பேர் குழுவினர் சுமந்து வருவர். ஐரூர் புதியக்காவு தேவி கோவிலில் இந்த பவனி தங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201907:08:56 IST Report Abuse
ருத்ரா பறவைக்கு தெரிந்த உணர்வு கூட அரசுக்கும் தீர்ப்பிற்கும் இல்லையே.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
12-ஜன-201923:30:29 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam I pray for the successful journey of the ornaments and no idiotic women sneak clandestinely to disturb the holy event.Swami saranam..
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201923:10:07 IST Report Abuse
கலியுக கண்ணன் திருவாபரணங்கள் யானையின் மீது வைத்து கருடன் வரும்வரை காத்திருப்பார்கள். இதுதான் ஐதீகம் .இன்றும் கருடன் வந்து வட்டமிட்ட பிறகு திருவாபரண பெட்டி புறப்பட்டது . . எந்த அயோக்கிய நாத்திகவாதியாவது இது எப்படி நடக்கிறது என்று கூற முடியுமா ? இந்த கருடன் கள்ளத்தனமாக பலவந்தமாக வருவது அல்ல. தானாக ஐயப்பனின் திருவாபரணங்களை பாதுகாக்க வருவது. சுவாமி சரணம் அய்யப்ப சரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X