அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிந்து எம்.பி., துளசி கபார்ட் போட்டி Dinamalar
பதிவு செய்த நாள் :
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிந்து எம்.பி., துளசி கபார்ட் போட்டி

வாஷிங்டன்: வரும், 2020ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட, அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.,யான துளசி கபார்ட் 37, முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிந்து எம்.பி., துளசி கபார்ட் போட்டி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம், 2020ல் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், அந்தாண்டு நடைபெற உள்ளது.அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, கட்சிகள் சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல்

நடைபெறும். இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக, எம்.பி.,யான, துளசி கபார்ட் கூறியுள்ளார்.அதிபர்தேர்தலில் வென்றால், நாட்டின் மிகவும் வயது குறைந்த அதிபர், முதல் ஹிந்து அதிபர் என்ற பெருமையை துளசி கபார்ட் பெறுவார்.


அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அவர் கூறியதாவது: வரும், 2020ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விரைவில், இது குறித்து முறையாக அறிவிப்பேன். இந்த முடிவை எடுப்பதற்கு, பல முக்கிய காரணங்கள் உள்ளன. அமெரிக்க மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்; அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மிக முக்கிய பிரச்னை, போர் மற்றும் அமைதி. இது குறித்து, சரியான

Advertisement

முடிவை எடுக்க வேண்டும். இதுவே, தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில், முன்னாள் துணை ஜனாதிபதி, ஜோ பிடன், 2016ல் நடந்த அதிபர் வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ் உள்ளிட்டோர், அதிபர் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201917:33:30 IST Report Abuse

Pugazh Vஎங்கே போகமுடியாததால் யாருக்கு கோவம்?? ( 6 முறை அங்கே போய் வந்திருக்கிறேன்- சும்மா தம வலுக்காக) தவறான ஒரு தகவல் ஒரு ஊடகத்தில் வந்தால் நாலுபேர் சுட்டி காட்டத்தான் செய்வார்கள். இதிலென்ன கோவம் வாழுது? இந்த பெண்மணி ஒன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கவில்லை. செய்தியை சரியாகப் படிக்கவும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:32:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaசிங்கத்தை பார்த்து அம்பு எய்யட்டும்

Rate this:
jagan - Chennai,இந்தியா
13-ஜன-201906:21:48 IST Report Abuse

jaganஇவர் இந்திய வம்சாவழி இல்லை. இவர் பெற்றோர் அமெரிக்க சம்மோவா எனும் தீவில் இந்து முறை படி வாழும் வெள்ளை காரர்கள் ...இவரும் 100 % வெள்ளையர், மதம் மட்டும் ஹிந்து (நம்ம ஆளுங்க மதம் மாறுவது போல் மதம் மாறிய வெள்ளையர்)...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X