முதல்வர் பழனிசாமி மீது அவதூறு: மேத்யூஸ் உட்பட மூவர் மீது வழக்கு Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வர் பழனிசாமி மீது அவதூறு
மேத்யூஸ் உட்பட மூவர் மீது வழக்கு

சென்னை: கோடநாடு விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மீது அவதுாறு பரப்பியதாக 'தெகல்கா' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் உட்பட மூன்று பேர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி ,அவதூறு, கோடநாடு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் கோடநாட்டில் ஜெயலலிதா ஓய்வெடுக்கும், தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அதன் காவலாளி ஓம் பகதுார் 2017ல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார் அரிவாளால் வெட்டப்பட்டு இருந்தார். கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது கூட்டாளி சயன், குடும்பத்துடன் காரில் சென்ற போது, பாலக்காடு அருகே விபத்தில் படுகாயமடைந்தார். மனைவி, மகள் உயிரிழந்தனர். இதற்கிடையே கோடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கூலிப்படையை சேர்ந்த, சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்மேஷ் அலி, மனோஜ், ஜிஜின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோடநாடு காவலாளி உட்பட ஐந்து பேர் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக, தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை, தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டில்லியில் வெளியிட்டார். அதில், கோடநாடு கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து விளக்கம் அளித்ததுடன், முதல்வர் பழனிசாமி குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, 'முதல்வர் பற்றி அவதுாறு

பரப்பியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு , ஆ.ராஜாஇணை செயலர் ராஜ் சத்தியன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து மேத்யூஸ் சாமுவேல், சயன், மனோஜ் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில், போலீசார் இறங்கியுள்ளனர்.

முதல்வர் பதவி விலக வேண்டும் :


சென்னையில் நேற்று தி.மு.க., கொள்கை பரப்பு செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமானஅளித்த பேட்டி: மேத்யூ, சயன், மனோஜ் கொடுத்த பேட்டி அடிப்படையில், முதல்வர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். கோடநாடு எஸ்டேட், சொத்து குவிப்பு வழக்கில் பிரதான சொத்து. ஜெயலலிதா, அதை முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். கொள்ளை சம்பவம் நடந்த அன்று, போலீசார் யாரும் அங்கு இல்லை; மின்சாரம் இல்லை. அங்கிருந்த 27 கண்காணிப்பு கேமராக்களும் வேலை செய்யவில்லை. இதற்கு, என்ன காரணம்? இதில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ், 'இதற்கு முதல்வர் துாண்டுதல் காரணம்' என்று கூறுகின்றனர். இந்திய சட்ட விதிகளின்படி, முதல் குற்றவாளி முதல்வர் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. முதல்வர் மீது குற்றச்சாட்டு வந்துள்ளதால், அவர் பதவி விலக வேண்டும். குறைந்தபட்சம் அவரிடம் உள்ள உள்துறையை வேறு யாரிடமாவது ஒப்படைக்கலாம். இவ்வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறினார்.

தினகரன் கோரிக்கை :


'இந்த வழக்கை பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றமே தாமாக முன்வந்து தன் முழு கட்டுப்பாட்டில், இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்' என அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

குற்றச்சாட்டில் அரசியல் பின்னணி :


சென்னையில் முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:டில்லியில் மேத்யூஸ் சாமுவேல் நேற்று முன்தினம் வீடியோவை வெளியிட்டுஉள்ளார். அதில், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்., 24ல் நடந்த ஒரு

Advertisement

சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளிட்டுள்ளார். இதில் உண்மை இல்லை. இந்த செய்திகளை வெளியிட்டோர் மீதும், அவர்களுக்கு பின்புலமாக இருந்தோர், உடனடியாக கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வர். கோடநாடு எஸ்டேட் சம்பவத்தில், குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கைதானோர் இதுவரை 22 முறை நீதிமன்றம் சென்று வந்துள்ள னர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாதவர்கள் தற்போது புதிதாக ஒரு செய்தியை சொல்லி வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர்.

இந்த வழக்கு பிப்., 2ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இவர்களுக்கு பின்னால் இருப்போர், விரைவில் கண்டறியப்படுவர். ஜெயலலிதா, கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்களைப் பெற்று கோடநாட்டில் வைத்துள்ளதாகவும், அவற்றை எடுப்பதற்காக இவர்கள் சென்றதாகவும் அந்த வீடியோவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடத்திலும் எந்த ஆவணத்தையும் எப்போதும் பெற்றது கிடையாது. ஜெ.,க்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது விசாரணையில் தெரியும். அரசியலில் எங்களை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் தான், இப்படிப்பட்ட குறுக்கு வழியை கையாளுகின்றனர்.என் மீதான குற்றச்சாட்டுக்கு, அரசியல் பின்புலம் உள்ளது என்று கருதுகிறேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர் பதவி மீதே குறியாக இருப்பதால், என்னை பதவி விலக சொல்கிறார். குறுக்கு வழியை கையாண்டு இந்த அரசை கவிழ்க்க முடியாது.இவ்வாறு முதல்வர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
13-ஜன-201920:49:42 IST Report Abuse

oceமேத்யூஸ் சாமுவேல் தினகரன் கையாளா.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201923:43:32 IST Report Abuse

தமிழ்வேல் ops ஆளா இருக்கும்னு நினைச்சேன்....

Rate this:
oce - chennai,இந்தியா
13-ஜன-201920:48:02 IST Report Abuse

oceஎதிர் கட்சியினர் ஆட்சியினர் கவனத்தை திசை திருப்புவதால் மக்கள் நலப்பணிகள் தொய்வடைகின்றன. எல்லாம் பதவி வெறி.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201923:44:08 IST Report Abuse

தமிழ்வேல் உள் குத்தும் இருக்கலாம்....

Rate this:
MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா
13-ஜன-201912:57:53 IST Report Abuse

MUDIYATTUM VIDIYATTUM இந்த இரும்பு பெண்மணி என்று வர்ணிப்பவர் அடிமைகளை எவ்வளவு கேவலமா வைத்திருந்தார் என்று இப்போ தான் தெரிகிறது கடைசியில் இவர் தைரியம் அடிக்கி ஆளும் தன்மை எல்லாம் மிரட்டல் வேலை என்று இப்போ தான் தெரிகிறது இப்படி தான் அன்று சாத்தூர் ராமசந்திரன் காலில் விழுந்ததை படத்தை வெளி இட்டு அசிங்க படுத்தினர் இது தான் இவர் தைரியத்தின் லட்சணம் இன்னும் என்ன என்ன விஷயங்கள் அடிமைகள் கட்சியில் உண்டோ ஈஸ்வரோ ரட்சை

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X