ஊழலே இல்லாத ஆட்சி: பிரதமர் மோடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஊழலே இல்லாத ஆட்சி: பிரதமர் மோடி

புதுடில்லி: ''நாட்டில் முதல் முறையாக ஊழல் இல்லாத ஆட்சியைத் தந்துள்ளோம்; ஊழல் செய்யாமல் ஆட்சி செய்ய முடியும் என்பதை, பா.ஜ., நிரூபித்து உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மோடி, காங்கிரஸ், ராமர் கோயில்


பா.ஜ.,வின், தேசிய கவுன்சில் கூட்டம், டில்லியில் நடந்தது. அதன் இரண்டாம்நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக, மத்திய அரசின் மீது, ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஊழல் இல்லாமல், அரசு நடத்த

முடியும் என்பதை, பா.ஜ., நிரூபித்துள்ளது. மிகவும் வலுவான அரசு நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. ஆனால், ஸ்திரதன்மை இல்லாத, ஒரு அரசுஅமைய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

அப்போதுதான், தங்களுடைய குடும்பத்தை வளர்த்துக் கொள்ள முடியும்; இத்தனை ஆண்டு களாக செய்து வந்த ஊழலை செய்ய முடியும் என, அந்தக் கட்சிகள் நினைக்கின்றன. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது, தோல்வியடைந்த ஒரு முயற்சி. சொந்த நலனுக்காகவே, இந்தக் கட்சிகள் இணைந்துள்ளன. இது வெற்றி பெறாது. ஆனால், 'அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக' என்ற கொள்கையுடன், பா.ஜ., செயல்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள நிலப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படக் கூடாது என்பதே, காங்கிரசின் நோக்கம். இதற்காக,

Advertisement

வழக்கறிஞர்கள் மூலம், தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள், சி.பி.ஐ., தங்களுடைய மாநிலத்தில் விசாரிக்க தடை விதித்துள்ளன. எதற்காக இவர்கள் பயப்படுகின்றனர்? நான், குஜராத் முதல்வராக இருந்தபோது, அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் பல பிரச்னைகளை சந்தித்தேன். ஆனால், சி.பி.ஐ., விசாரிக்க தடை ஏதும் விதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201907:38:20 IST Report Abuse

Anandanஅப்புறம் ஏன் ரபேல் ஒப்பந்தம் பற்றி JPC விசாரணைக்கு கால் நடுங்குது. ஜெய்ஷா அபரித வருமானத்தை கேள்வி கேட்டால் ஏன் அரசாங்க வக்கீலை அனுப்புறீங்க? ஜெய்ஷாவிற்கும் அரசிற்கும் என்ன சம்பந்தம்?

Rate this:
Manian - Chennai,இந்தியா
14-ஜன-201910:47:28 IST Report Abuse

Manianதேவை இல்லாத கேள்வி. நீ போய் முதல்வராகி இதை செய்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201920:23:08 IST Report Abuse

K.Sugavanamஅடுத்த ஆட்சி மாறிவந்தால் தானே அதெல்லாம் வெளிவரும்..

Rate this:
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201918:04:54 IST Report Abuse

Abu Faheemராஃபிள் ஊழல், வியாபம் ஊழல் இதுலாம் என்னவாம்?

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X